உள்ளூர் செய்திகள்

பெண்களுக்கு அரசியலில் 33 சதம் இடம் வழங்கப்பட வேண்டும் – கோவையில் உலக மகளிர் தின கருத்தரங்கில் தீர்மானம்.

செய்தித்தொகுப்பு: A P மணிபாரதி

பெண்களுக்கு அரசியலில் குறிப்பாக சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றம் உள்ளிட்ட அவைகளில் 33 சதாம் இடம் வழங்க வேண்டும் என்று கோவையில் நடைபெற்ற மகளிர் தின கருத்தரங்கில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உலக மகளிர் தின கருத்தரங்கம் கோவை ஜீவா இல்லத்தில் இந்திய மாதர் தேசிய சமையலகத்தின் சார்பில் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கத்திற்கு சம்மேளனத்தின் மாவட்ட தலைவர் எம்.நிர்மலா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கே.சுமதி முன்னிலை வகித்தார். சுஜாதா பாலதண்டாயுதம் கலை அஸ்வினி ஆகியோர் கருத்தரங்கில் பேசினர்.

இந்தக் கருத்தரங்கில் உலகில் பெண்கள் ஆண்களுக்கு சமமாக நடத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பெண் உரிமைகள் சம்பந்தமாக கோரிக்கைகள் 1871 பிரெஞ்சு புரட்சிக்கு பின்னர் முன்வைக்கப்பட்டு பெண்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

150 ஆண்டு கால போராட்டத்திற்கு பின்பும் பெண்கள் சம உரிமையை எட்ட முடியவில்லை. குறிப்பாக இந்தியாவில் அரசியலில் சட்டமன்றம் நாடாளுமன்றம் இவற்றில் 33 சதவீத இட ஒதுக்கீடு நீண்ட கால கோரிக்கையாக மட்டுமே உள்ளது.

பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. பணி செய்யும் இடங்களில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் அதே வேலையை செய்தாலும் கூட அவர்களுக்கு குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது. சம வேலைக்கு சம ஊதியம் என்ற நிலை இன்னும் எட்ட போடவில்லை என்பன உள்ளிட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

  1. பெண்கள் மீதான பாலியல் வன்முறையை தடுக்கும் வகையில் தனி சட்டம் இயற்றப்பட வேண்டும்.
  2. சட்டமன்றம் நாடாளுமன்ற அவைகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இடம் ஒதுக்க வேண்டும்.
  3. சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். பணிசெய்யும் இடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
  4. சமையல் கேஸ் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்.
  5. கோவை தடாகம் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
  6. சங்கனூர் பள்ளம் சுத்தம் செய்யப்பட்டு தூர்வாரப்பட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்களும் இந்த கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்டது.

மறைந்த தலைவர் கீதா முகர்ஜி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னதாக இந்திய மாதர் தேசிய சமையலெனத்தின் கொடியை மாவட்ட தலைவர் எம்.நிர்மலா ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில் கோயமுத்தூர் மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய மாமன்ற உறுப்பினர் பிரபா ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர் சாந்தி சந்திரன், மைலம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சாரதா மணி குமார் ஆகியோருக்கு சாதி அணிவித்து கௌரவிக்கப்பட்டது. ஜே. கலா, மாவட்டத் துணைச் செயலாளர் ஜோதீஸ்வரி, சி.நந்தினி உள்ளிட்ட கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button