இந்தியா

பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு: இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மனு உச்ச நீதிமன்ற விசாரணைக்கு ஏற்பு

பெண்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆனி ராஜா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3 ஆம் தேதி விசாரணைக்கு வர இருக்கிறது. இது தொடர்பாக, உச்ச நீதிமன்றம் ஒன்றிய அரசாங்கம் மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பத்து அரசியல் கட்சிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மனுதாரரின் வழக்குரைஞராக பிரஷாந்த் பூஷன் ஆஜராக இருக்கிறார்.

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு மசோதாவை 1996 ஆம் ஆண்டு மக்களவையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்த கீதா முகர்ஜி கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய மாதர் தேசிய சம்மேளனமும் தொடர்ந்து போராடி வருகின்றன. மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா மக்களவையில் இன்னும் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button