தமிழகம்

தமிழகம், புதுச்சேரி வானொலி நிலையங்களை மூட முடிவு

அமைச்சர் எல்.முருகன் கள்ள மவுனம்

ஒற்றை பண்பாட்டை திணிப்பது என்ற மோடி அரசின் சூழ்ச்சிகளின் ஒரு பகுதியே இந்த முடிவு. – சு.வெங்கடேசன் எம்.பி.,

சென்னை, ஜன. 11 – தமிழ்நாட்டில் உள்ள வானொலி நிலையங்களை மூடுவது என்றும் வெறும் ஒலிபரப்பு நிலையங்களாக மட்டும் மாற்றுவது என்றும் ஒன்றிய அரசின் செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறையின் கீழ் செயல்படும் பிரசார் பாரதி முடிவு செய்திருப்பது அதிர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்திற்கு நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசு அளித்துள்ள இந்த “பொங்கல் பரிசு” கடும் எதிர்ப்பினையும் உருவாக்கி யுள்ளது. வானொலி நிலையங்கள் மூடப்பட்டால் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் வேலையிழப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் புதுச்சேரி வானொலி நிலையம் உட்பட மொத்தம் ஆறு வானொலி நிலை யங்கள் உள்ளன. இவற்றில் சென்னை வானொலி நிலையத்தை முதன்மை நிகழ்ச்சி தயாரிப்பு நிலையமாக வைத்துக் கொண்டு புதுச்சேரி, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், திரு நெல்வேலி ஆகிய வானொலி நிலை யங்களை வெறுமனே ஒலிபரப்பு நிலையங்களாக மாற்றுவது என பிரசார் பாரதி முடிவு செய்துள்ளது. தற்சமயம் அனைத்து வானொலி நிலையங்களுமே நிகழ்ச்சி தயாரிப்பு நிலையங்களாகவும் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு நிலையமும் ஒவ்வொரு 12 மணி நேரத்திற்கு தனது சொந்த தயாரிப்பு நிகழ்ச்சிகளை ஒலிபரப்பு செய்து வருகின்றன.

உள்ளூர் கலாச்சாரம், விவசாயம், நாட்டுப்புற கலைகள், உள்ளூர் மக்களுக்கு தேவையான தகவல்கள், உள்ளூர் நடப்பு சார்ந்த செய்திகள் என ஒவ்வொரு வானொலி நிலையமும் தாங்களே நிகழ்ச்சி களை தயாரித்து ஒலிபரப்பி வருகின்றன. இவை தவிர அகில இந்திய வானொலி யின் சென்னை முதன்மை நிகழ்ச்சி தயாரிப்பு மையத்தின் நிகழ்ச்சிகளும், அகில இந்திய வானொலியின் தில்லி செய்திகளும் இடம்பெறுகின்றன. இந்நிலையில் “ஒரு மாநிலம், ஒரு முதன்மை நிகழ்ச்சி தயாரிப்பு வானொலி நிலையம்” என்ற புதிய திட்டத்தை ஒன்றிய அரசு அறிவித்தது. இதன்படி தமிழ்நாட்டில் உள்ள வானொலி நிலையம் மூடப்படும் என்ற அபாயம் எழுந்துள்ளது. ஆனால் ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்ச ராக பொறுப்பேற்ற – தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன், ஒன்றிய அரசின் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படமாட்டாது என்று உறுதியளித்திருந்திருந்தார்.

ஆனால் அவரது உறுதி காற்றோடு பறந்து போனது. பொங்கல் அன்று முதல் புதுச்சேரி உள்ளிட்ட தமிழ் மாநி லத்தின் பாரம்பரியமிக்க வானொலி நிலையங்கள் மூடப்படுகின்றன. இதை பிரசார் பாரதியின் செய்தி அறிவிப்பு உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளியன்று பிரசார் பாரதியின் அனைத்து நிகழ்ச்சி தயா ரிப்பு தலைமைப் பொறுப்பாளர் களின் சந்திப்பை பிரசார் பாரதியின் கூடுதல் பொது இயக்குநர் நடத்தியுள் ளார். அந்தக் கூட்டத்தில் முதன்மை நிலையம் தவிர அனைத்தையும் வெறும் ஒலிபரப்பு நிலையங்களாக மாற்றுவது என்ற அரசின் முடிவு பொங்கல் முதல் அமலாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியாகி யுள்ள தகவல்களின்படி அவசிய மான உள்ளூர் விபரங்கள் இருந்தால் வாரம் ஒன்றுக்கு வெறும் 5 மணி நேரம் மட்டும் அவை பற்றி ஒலிபரப்பு செய்து கொள்ளலாம் என்று அனுமதி அளிக்கப் பட்டுள்ளதாக தெரிகிறது. பிரசார் பாரதியின் இந்த நடவடிக்கை தொடர்பாக சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் எல்.முருகன் எந்த பதிலும் இது வரை சொல்லவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. உள்ளூர் நிகழ்ச்சிகள் தயாரிப்பு முற்றாக முடக்கப்படும் அதேவேளையில் தில்லியிலிருந்து உருவாக்கப்படும் செய்தி கள் நிகழ்ச்சிகளுமே தமிழகத்தில் உள்ள வானொலி நிலையங்களில் கோலோச்சும் அபாயம் எழுந்துள்ளது.

ஒற்றை பண்பாடு என்ற சூழ்ச்சியின் ஒரு பகுதி : சு.வெங்கடேசன் எம்.பி., கண்டனம்

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரசார் பாரதி “ஒரு மாநிலம், ஒரு முதன்மை நிகழ்ச்சி தயாரிப்பு நிலையம்” என்ற கொள்கையை பொங்கல் அன்றில் இருந்து நடைமுறைப்படுத்த இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், திருநெல்வேலி மற்றும் புதுச்சேரி வானொலி நிலையங்கள் உள்ளூர் பண்பாடுக்கான முக்கியத்துவம், மாநில மொழி வளர்ச்சி, நாட்டுப் புற கலைகள், அடித்தள திறன்களை அடையாளம் காணு தல், பன்மைத்துவம், இப்படி பெரும் பங்க ளிப்பை சமூகத்திற்கு வழங்கி வருகின்றன. இந்த நிலையில் சென்னை தவிர்த்த ஐந்து வானொலி நிலையங்களை தரம் இறக்கி “நிகழ்ச்சி தயாரிப்பு நிலையங்கள்” என்பதை “ஒலி பரப்பு நிலையங்களாக” மட்டும் மாற்றுவ தாக வந்துள்ள செய்திகள் அதிர்ச்சி அளிப்பது ஆகும். இந்த நிலையங்கள் இனி வாரத்திற்கு ஐந்து மணி நேரம் மட்டும் உள்ளூர் சார்ந்த நிகழ்ச்சிகளை ஒலிபரப்பும் என்ற முடிவும் எடுக்கப்பட்டுள்ளது. ஒரே நிகழ்ச்சியை எல்லா வானொலி நிலை யங்களும் ஒலிபரப்பு செய்வது என்பது அலுப் பூட்டும் முறை மட்டுமல்ல, வணிகரீதியான வாய்ப்புகளையும் அழிக்கும் செயலாகும். தற்போது வானொலி நிலைய ஒலிபரப்பு களை ஸ்மார்ட் போன் மூலம் கேட்கும் அள விற்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ள சூழ்நிலையில் ஒன்றிய அரசு வானொலி நிலை யங்களை படிப்படியாக மூடுவது ஏற்புடை யதல்ல. வானொலி நிலையங்களின் செயல்பாடு முடக்கம், ஊழியர் பாதிப்பு, வேலை வாய்ப்பு இழப்பு ஆகிய விளைவுகளை உரு வாக்கும். ஆனால் அத்தோடு மட்டும் இதன் பாதிப்பு சுருங்கி விடுவதல்ல. “ஒற்றைப் பண்பாடு” என்ற நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதி யாகவே இம் முடிவு எடுக்கப்படுகிறது என் பதே மிக முக்கியமானது. எனவே இம்முடி வினை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button