இந்தியா

புனித தலங்களுக்கு ரயில்களில் செல்ல ‘சுத்த சைவம்’ சான்றிதழ்?

புதுதில்லி, நவ.17-  ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரயிலில் புனித தலங்களுக்கு பயணம் செய்வோர், சைவ உணவு அடிப்படையில் மட்டும் அல்லாது முற்றிலும் ‘சுத்த சைவ’ சூழ லில் இணைக்கப்பட உள்ளதாக ‘சாத் விக் கவுன்சில் ஆப் இந்தியா’ (Sattvik Council of India) நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காக, இந்திய ரயில்வேயின் விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா நிறு வனமான ‘ஐஆர்சிடிசி’ ( Indian Railway Catering and Tourism Corporation) தங்களுடன் புரிந்துணர்வை ஏற்படுத்தி இருப்பதாகவும் அந்த நிறுவனம் தெரி வித்துள்ளது.

‘சாத்விக் கவுன்சில் ஆப் இந்தியா’ உலகில் சைவப் புரட்சியைக் கொண்டு வர விரும்பும் நிறுவனம் என்று தன்னைத் தானே பிரகடனப்படுத்திக் கொள்ளும் தனியார் நிறுவனம் ஆகும். விஞ்ஞானப் பூர்வமான மற்றும் கடினமான பழங் கால வேதக் கொள்கைகளின் அடிப் படையில் உணவுத் தரநிலைகளை உரு வாக்குவதற்காக செயல்படும் அமைப்பு என்றும் அந்த நிறுவனம் கூறிக் கொள்கிறது. இந்த நிறுவனத்துடன்தான், ‘சுத்த சைவ அனுபவத்தை பயணிகளுக்குத் தருகிறோம்’ என்ற பெயரில், இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி கரம் கோர்த்துள்ளதாக கூறப்படுகிறது. ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட சில ரயில்களில் ஏற்கெனவே சைவ உணவு ஏற்பாடு உள்ளது. இந்நிலையில், புனித தலங்களுக்கு செல்லும் பயணி களுக்கு வழங்கப்படும் உணவு மட்டு மன்றி, சோப்புகள் மற்றும் பிற பொருட் களும் இயற்கையான மிதமான பொருட் களாக இருக்கும்; உணவு பரிமாறும் பணியாளர்கள் அசைவ உணவைக் கை யாள மாட்டார்கள், அவர்கள் தயாரிக்கும் சமையலறையில் சைவப் பொருட்க ளைத் தவிர வேறு எதையும் கையாள அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. 

அவ்வளவு ஏன், இந்த ரயில்களில் பணியாற்றும் துப்புரவு முகவர்கள் கூட சைவத்தைக் கையாள்பவர்களாகவே இருப்பார்கள் என்று ‘சாத்விக் கவுன்சில் ஆப் இந்தியா’வின் நிறுவனர் அபிஷேக் பிஸ்வாஸ் தெரிவித்துள்ளார். இதன்படி, வந்தே பாரத்தில் தொடங்கி, ஜம்மு -காஷ்மீரில் உள்ள ஸ்ரீமாதா வைஷ் ணவி தேவி, கட்ரா வரை புனித இடங்க ளுக்குச் செல்லும் சில ரயில்களுக்கு, சாத்விக் கவுன்சில் தொண்டு நிறுவனத் தின் சுத்த சைவச் சான்றிதழை ஐஆர்சி டிசி  பெறும். புனிதத் தலங்களுக்கு ரயி லில் பயணம் செய்வோர் ஐஆர்சிடிசி-யை நம்பலாம்… அவர்கள் உங்களுக்கு சுத்தமான சைவ அனுபவத்தை தரு வார்கள் என்று சாத்விக் கவுன்சில் ஆப் இந்தியா பயணிகளுக்கு உத்தரவாதம் வழங்க உள்ளது.

ரயில்களுக்கு சான்றளிக்க மட்டும் அல்லாது; எதிர்காலத்தில்  அடிப்படை சமையலறை, தில்லி மற்றும் கட்ராவில் உள்ள இரண்டு ஓய்வறைகள் மற்றும் ஜிஞ்சர் ஹோட்டலின் ஒரு தளம் ஆகிய வற்றோடு இந்த சான்றிதழ் இணைந்தது என்றும் ஐஆர்சிடிசி மூத்த அதிகாரி ஒரு வர் தெரிவித்துள்ளார். “சாத்விக் சான்றளிக்கப்பட்ட ரயிலில் சைவப் பயணிகளுக்காக உருவாக்கப் படும் பி.என்.ஆரை நாங்கள் எதிர்கால டிஜிட்டல் விருப்பங்களாக பார்க்கி றோம். இதனால், பயணிகள் இ-கேட்ட ரிங் மூலம் வெளியில் இருந்து உண வைக்கூட ஆர்டர் செய்ய முடியாது. ஏனெ னில், அவர்கள் சைவ விருப்பங்களை ஆர்டர் செய்ய மட்டுமே முடியும்” என்று சாத்விக் கவுன்சிலைச் சேர்ந்த விதர்வ் பதக் என்பவர் தெரிவிக்கிறார். “சைவ உணவு உண்பவர்கள் சுற்று லாவில் செல்வாக்கு மிக்க நுகர்வோர் பிரி வினராக இருக்கிறார்கள்.. எனவே, சைவ உணவு மற்றும் சைவ சூழ்நிலை யை அவர்கள் தேடுகிறார்கள்..!” என்று சாத்விக் கவுன்சில் நிறுவனர் அபிஷேக் பிஸ்வாஸ் கூறுகிறார். “சாத்விக் கவுன்சில் ஆப் இந்தியா வுடன் இணைந்து சைவ சான்றிதழை முன்னோக்கி கொண்டு வருவதில் நாங் கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்று வெரி டாஸ் பீரோவின் வடக்கு மண்டல பொது மேலாளர் பிரிஜேஷ் சிங் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button