இந்தியா

பத்ம விருதுகளை நிராகரித்த மேற்குவங்க இசைக் கலைஞர்கள்!

புதுதில்லி, ஜன.27- இந்தியாவில் வழங்கப்படும் விருதுகளில் ‘பத்ம விருதுகள்’ உய ரிய விருதுகளாக கருதப்படுகின்றன. கலை, இலக்கியம், கல்வி, விளை யாட்டு, மருத்துவம், சமூக சேவை, பொறியியல், அறிவியல், பொது விவ காரங்கள், வர்த்தகம், தொழில்கள், குடிமைச் சேவை போன்ற துறைகளில் சாதனை செய்தவர்களுக்கு, ‘பத்ம விபூஷன்’, ‘பத்ம பூஷன்’, ‘பத்ம ஸ்ரீ’ என மூன்று வகையிலான விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு வழங்கப்படுகின்றன. அதன்படி 2022-ஆம் ஆண்டுக்கு அறிவிக்கப்பட்ட பத்ம விருதுகளை மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த இசைக் கலைஞர்கள் 2 பேரும், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவும் நிராகரித்து விட்ட னர்.

மேற்கு வங்கத்தின் புகழ்பெற்ற தபேலா இசைக் கலைஞர் பண்டிட் அனிந்தியா சாட்டா்ஜி-க்கு ஒன்றிய அரசு ‘பத்ம ஸ்ரீ’ விருது அறிவித்தி ருந்த நிலையில், அதனை அவர் ஏற்க மறுத்து விட்டார். “இந்தக் கவுரவத்தை ஏற்றுக் கொள்ளுமாறு தில்லியிலிருந்து செவ்வாய்க்கிழமை எனக்கு தொலை பேசியில் அழைப்பு வந்தது. விருது அறிவித்தமைக்கு நன்றி கூறினாலும், அதனை ஏற்க மறுத்துவிட்டேன். என் னுடைய சமகால கலைஞா்களும், எனக்கு அடுத்து வந்தவா்களும் பல ஆண்டுகளுக்கு முன்பே பத்மஸ்ரீ விரு தைப் பெற்றுவிட்டனா். எனவே, எனது பயணத்தின் இந்தத் தருவாயில் ‘பத்ம ஸ்ரீ’ விருதை ஏற்றுக்கொள்ள நான் தயாராக இல்லை என்று கூறி விட்டேன்” என அனிந்தியா சாட்டர்ஜி தெரிவித்து விட்டார். பின்னணி பாடகி சந்தியா முகர்ஜி யும், தனக்கு அறிவிக்கப்பட்ட ‘பத்மஸ்ரீ’ விருதை ஏற்க போவதில்லை என்று கூறி விட்டார்.

சந்தியா முகர்ஜியின் மகள் சவுமி சென்குப்தா இதுதொடர் பாக அளித்த பேட்டியில், “சந்தியா முகர்ஜியைப் போன்ற ஒரு மூத்த கலைஞருக்கு, 90 வயதிற்குப் பிறகு பத்ம ஸ்ரீ வழங்குவது மிகவும் அவ மானகரமானது” என்று குறிப்பிட்டார். இதேபோல மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், மேற்குவங்க முன்னாள் முதல்வரு மான புத்ததேவ் பட்டாச்சார்யா, தனக்கு அறிவிக்கப்பட்டிருந்த ‘பத்ம பூஷன்’ விருதை ஏற்க மறுத்து விட்டார். விருது குறித்து தன்னிடம் யாரும் கூற வில்லை என்றும், அதனை நிராகரிப்ப தாகவும் அவர் கூறினார்.

“பத்மபூஷன் விருதுக்குப் பரிந்து ரைக்கப்பட்ட புத்ததேவ் பட்டாச் சார்யா அதை ஏற்க மறுத்துவிட்டார். அரசின் இத்தகைய விருதுகளை நிராகரிப்பது கட்சியின் நிலையான கொள்கையாகும். எங்களின் பணி விருதுகளுக்கானது அல்ல, மக்க ளுக்கானது” என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது. புத்ததேவ் பட்டாச்சார்யாவுக்கு போன்று, காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத்திற்கும் மோடி அரசு ‘பத்ம பூஷண்’ விருது அறிவித்திருந்தது. ஆனால், குலாம் நபி ஆசாத் விருதை ஏற்றுக் கொண்டார். இதனை காங்கிரஸ் தலைவர்கள் விமர்சித்துள்ளனர். ‘புத்ததேவ் விடுதலை விரும்பி யாக (ஆசாத்) இருக்க விரும்புகிறார்; அடிமையாக (குலாம்) அல்ல’ என்று காங்கிரஸ் மூத்த தலைவா் ஜெய்ராம் ரமேஷ் தனது டுவிட்டா் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆசாத் என்றால் இந்தியில் விடுதலை என்றும், குலாம் என்றால் அடிமை என்றும் பொரு ளாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button