தமிழகம்

சமூக மாற்றத்துக்கான ஒருங்கிணைந்த செயல்பாடுகளை இந்திய கலாச்சார நட்புறவுக் கழகம் முன்னெடுத்திடும் : மூத்த வழக்கறிஞர் கே. தேசிங் பேச்சு

செய்தி தொகுப்பு: இதழாளர் இசைக்கும்மணி

சென்னை: சமூக மாற்றத்திற்கான அமைப்பாகச் செயல்பட வேண்டி இருப்பதால் சாதி மத இனக் கலவரங்களை, புலம்பெயர்ந்திருக்கும் பிற மாநிலத்தவரின் பிரச்சனைகளை எல்லாம் ஒருங்கிணைந்த செயல்பாடுகளால் எதிர்கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம் . சென்னை மாவட்ட இஸ்கஃப்-ன் துணைத் தலைவராக இருக்கும் வழக்கறிஞர் ஆர். கிருஷ்ணகுமார் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தலில் செயலாளராகப் போட்டியிடுவதை இஸ்கஃப் அமைப்பு வரவேற்று அவருக்கு முழு ஆதரவு நல்கி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது என சென்னை மாவட்ட இஸ்கஃப்-ன் தலைமை குழு உறுப்பினரும், துணைத் தலைவருமான வழக்கறிஞர் கே. தேசிங் பேசினார்.

இந்திய கலாச்சார நட்புறவு கழகத்தின் சென்னை மாவட்ட பொதுக்குழு கூட்டம் டிச. 18 அன்று சென்னை தியாகராய நகர் பாலன் இல்லத்தில் நடைபெற்றது. மாவட்ட துணை தலைவர் வழக்கறிஞர் கே.தேசிங் தலைமை ஏற்று வழிநடத்தினார். செயலாளர் பா. செந்தில்குமார் வரவேற்று பேசினார். பொருளாளர் எஸ். ஆர் .மாதவன் ஒருங்கிணைத்தார்.

துணைத் தலைவர்கள் வழக்கறிஞர் ஆர். கிருஷ்ணமூர்த்தி ,ரேணுகா தாமஸ், திருஞானசம்பந்தம், மு. சீனிவாசன், பாரி , ஜி. காமாட்சி , ராஜவேலு மற்றும் வழக்கறிஞர் மோகன், பத்திரிகையார்கள் வெங் கடேசன், ராஜன், அருண் உள்ளிட்ட பலரும் கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்துரைத்துப் பேசினர்.

இஸ்கஃப் அமைப்பு மக்கள் பிரச்சனைகளுக்காக ஒன்றுபட்ட அமைப்பாகச் செயல்பட வேண்டி இருக்கிறது. வலுவான எதிர்ப்பு சக்திகளை எதிர்த்துப் போராட வேண்டி இருப்பதால், ஒற்றுமையுடன் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என செயலாளர் செந்தில்குமார் வரவேற்புரையில் குறிப்பிட்டார்.

கூட்டத்துக்கு தலைமை ஏற்று பேசிய வழக்கறிஞர் கே.தேசிங் பேசியதாவது: நமது அமைப்பு சந்திக்க வேண்டிய பிரச்சனைகள் நிறைய உள்ளது. சாதி மத இனக் கலவரங்கள், புலம்பெயர் ந்து வந்துள்ள பிற மாநிலத்தோரின் பிரச்சனைகள் எல்லாம் மிகப்பெரிய சவால்களாக உள்ளன. சமூக மாற்றத்துக்கான செயல்பாடுகளாக அவற்றை மேலெடுத்து ஒருங்கிணைந்த கூட்டு செயல்பாடுகளால் அவற்றை எதிர்கொள்ள வேண்டிய கட்டாய நிலைமை நம் முன் உள்ளது எனப் பேசினார்.

இஸ்கஃப்-ன் துணைத் தலைவராக இருக்கும் வழக்கறிஞர் ஆர். கிருஷ்ணகுமார் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தேர் தலில் செயலாளராக போட்டியிடுவதை இஸ்கஃப் அமைப்பு வரவேற்று, அவருக்கு முழு ஆதரவு நல்கி, அவரது வெற்றிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

இஸ்கஃப் வளர்ச்சிக்கான உறுப்பினர் சேர்க்கையை வேகப்படுத்த வேண்டும். கிளை அமைப்புகள், வட்டார அமைப்பு கள் மாவட்ட பொறுப்பாளரின் வழி காட்டுதலோடு இணைந்து செயல்பட வேண்டும் . அதற்காக வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை பொறுப்பாளராக ஆர் .ராஜவேலு, வரதன் , ஜி .காமாட்சி உள்ளிட்டவர் களைப் பொறுப்பாளர்களாகத் தேர்வு செய்திருக்கிறோம்.

அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தின் கருத்தரங்கம் டிச. 22-ல் சென்னை கேரள சமாஜத்தில் நடைபெறுகிறது. அதில் இஸ்கஃப் அமைப்பினர் திரளாகக் கலந்து கொள்ள வேண்டும்.

மார்க்சியப் பேராசான் ஜீவா நினைவு தினம் ஜன.18, தோழர் ராஜ்மோகன் நினைவேந்தல் தினம் ஜன.30, தாய்மொழி தினம் பிப்.20 வருவதால் அந்நாட்களைச் சிறப்பு நிகழ்ச்சிகளாகக் கொண்டாட இருக்கிறோம் .

அகில இந்திய இஸ்கஃப் தேசிய மாநாடு ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடந்து முடிந்துள்ளது. தமிழ்நாட்டில் இருந்து 13 பேர் தலைமை குழு உறுப்பினர், தேசிய துணைத் தலைவர்கள், நிர்வாக குழு, தேசிய குழு உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு சென்னை மாவட்ட குழு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

ஜீவா மணிமண்டபம் அமைத்திட நன்முயற்சிகளை மேற்கொண்ட தமிழக அரசுக்கு இஸ்கஃப் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என மாவட்ட செயலாளர் செந்தில் குமார் கூறினார்.

மூத்த வழக்கறிஞர் கே தேசிங் உள்ளிட்ட வழக்கறிஞர்களுடன் இணைந்து, உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தலில் போட்டியிடும் ஆர். கிருஷ்ணகுமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் மற்றும் துணைச் செயலாளர் நா பெரியசாமி ஆகியோரைச் சந்தித்து, அவர்களுக்குப் பொன்னாடை அணிவித்து வாழ்த்துப் பெற்றார்.

இதழாளர் இசைக்கும்மணி கூட்டம் முடிவில் நன்றி தெரிவித்துப் பேசினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button