இந்தியா

கிரிப்டோகரன்சியை கட்டுப்படுத்த புதிய சட்டம் கொண்டுவர நடவடிக்கை

புதுதில்லி,நவ.24- கடந்த ஆண்டு கிரிப்டோ கரன்சி வர்த்தகம் தொடர்பாக ரிசர்வ்வங்கி வெளியிட்ட சுற்றறிக்கையைக் கண்டித்த தோடு, கிரிப்டோகரன்சி வர்த்தகத்தின் மீதான தடையையும் நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு டிஜிட்டல் கரன்சி வர்த்தகம் இந்திய முதலீட்டா ளர்கள் குறிப்பாக சிறு முதலீட்டாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி வருகி றது. பிட்காயின் உட்பட கிரிப்டோ கரன்சிகள் தொ டர்ந்து வளர்ச்சி அடைந்து வருகின்றன. முதலீட்டாளர்களை மனதில் வைத்து, இந்தியா வில் கிரிப்டோகரன்சிகளின் கட்டுப்பாடற்ற வளர்ச்சி குறித்து ரிசர்வ் வங்கி மற்றும் சந்தை கட்டுப்பாட்டா ளர் செபியும் கவலை தெரிவித்தன. இப்போது பிட்காயின் 67,089 டாலர் என்ற அளவில் வர்த்தகம் ஆகிறது. ஓராண் டில் 131 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. ஒட்டு மொத்த கிரிப்டோ முதலீடு கள் 3 லட்சம் கோடி டாலரை எட்டியுள்ளது. ஆனால் கிரிப்டோ வர்த்தகத்தை ஒழுங்குபடுத்தும் சட்டத்தை கொண்டு வர ஒன்றிய அரசு துறைசார்ந்த நிபுணர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடு பட்டு வந்தது.

கிரிப்டோ வர்த்தகத்தில் ஏற்கெனவே பலகட்ட எச்ச ரிக்கைகள் வழங்கப்பட்ட நிலையில், அரசு தீவிர வரம்பு களை நிர்ணயிக்க ஆலோ சனை மேற்கொண்டது. நவம்பர் 29 ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இதற்காக புதிய மசோதா கொண்டு வரப்பட நடவ டிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது. அதன்படி, பரிவர்த்தனை களுக்கு அல்லது பணம் செலுத்துவதற்கு கிரிப்டோ கரன்சிகளைப் பயன்படுத்து வதை ஒன்றிய அரசு தடை விதிக்கும் எனத் தெரிகிறது. அதேசமயம் இதற்கு மாற்றாக புதிய கிரிப்ட்டோ கரன்சியை மத்திய ரிசர்வ் வங்கியே வெளியிடும் எனத் தெரிகிறது.

கிரிப்ட்டோகரன்சி மற்றும் அதிகாரபூர்வ டிஜிட்டல் கரன்சி ஒழுங்குமுறை மசோதா 2021 என்ற பெயரில் இந்த மசோதா உருவாக்கப் படுகிறது.ஒன்றிய அரசு இந்தியாவில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் பல தனியார் கிரிப்டோகரன் சிகளைத் தடை செய்ய வும், இதே தொடர்ந்து இந்தி யாவில் அதிகாரப்பூர்வமாக டிஜிட்டல் கரன்சி உரு வாக்கும் திட்டமாகவும் இந்த மசோதா இருக்கும் என்றும் புதிய முதலீட்டாளர்களை ஈர்க்கும் முயற்சியில் கிரிப்ட்டோ நிறுவனங்கள் ஈடுபட்டுள்ள நிலையில் அவற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இது இருக்கும் என்றும் தெரி கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button