இந்தியா

மோடி ஆட்சியால் இந்தியாவில் உள்நாட்டுக் கலவர அபாயம்!

பாட்னா, பிப்.10- பிரதமர் நரேந்திர மோடி தலைமை யிலான ஆட்சியில் உள்நாட்டு போரை நோக்கி நாடு சென்று கொண்டிருப்ப தாக பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் கூறியுள்ளார். பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் நிறு வனருமான லாலு பிரசாத், புதனன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப் போது, இதுதொடர்பாக அவர் கூறிய தாவது: “உத்தரப் பிரதேசத்தில் பாஜக வால் எந்த வளர்ச்சியும் ஏற்பட வில்லை. பாஜகவினர் செய்யும் பிரச் சாரத்தைப் பார்த்தாலே அவர்களிடம் பதற்றமும், தோல்விபயமும் இருப் பது நன்றாக தெரிகிறது. இந்தத் தேர்த லுக்குப் பிறகு பாஜக எனும் கட்சியே காணாமல் போகப் போகிறது. பாஜக மதத்தை வைத்துக் கட்சி நடத்துகிறது. மதம் குறித்துப் பேசியே மக்களை சோர்வடையச் செய்கிறது. நரேந்திர மோடி ஆட்சியின் கீழ் நாடு உள்நாட்டுப் போரை சந்திக்கும் நிலை யை நோக்கிச் சென்று கொண்டிருக்கி றது. கலவரம் மற்றும் அயோத்தி, வார ணாசி என்று கோயில்களைப் பற்றி மட்டுமே பாஜக-வினர் பேசுகின்றனர். பணவீக்கத்தைப் பற்றியோ, வறுமை நிலையைப் பற்றியோ அவர்கள் பேசு வது இல்லை. 70 ஆண்டுகளுக்கு முன்பு நமது முன்னோர்கள் பிரிட்டிஷாரை விரட்டி யடித்தார்கள். தற்போது பாஜகவினர் வடிவில் பிரிட்டிஷார் மீண்டும் வந்து விட்டார்கள். உத்தரப்பிரதேச மாநிலத் தேர்த லில் சமாஜ்வாதி கட்சிக்கு எனது ஆத ரவு உண்டு.” இவ்வாறு லாலு பிரசாத் கூறியுள் ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button