இந்தியா

முலாயம் சிங் யாதவ் மறைவு: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ் மறைந்தார். நாட்டின் மூத்த தலைவர்களில் ஒருவரான அவர் அனைவராலும் பெரிதும் மதிக்கப்பட்டவர். ராம் மனோகர் லோகியாவின் இலட்சியங்களில் பற்றுறுதி கொண்டு சமாஜ்வாதி கட்சிக்குத் தலைமை தாங்கியவர். இவர் உத்தர பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராகப் பொறுப்பு வகித்தபோது, சமுதாயத்தின் ஏழை மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களின் மேம்பாட்டிற்காக அயராது பாடுபட்டார். சமூக நீதி மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுடைய உரிமைகளின் பாற்பட்ட இவரது உறுதிப்பாடு நிகரற்றது ஆகும்.

ஐக்கிய முன்னணி ஆட்சிக்காலத்தின் போது, பா.ஜ.க ஆட்சிக்கு வராமல் தடுப்பதில், தேசிய அளவில் அவர் மிகவும் முக்கியமான பங்காற்றினார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நலம் குறித்து அவரது மகன் அகிலேஷ் யாதவிடம் கட்சியின் பொதுச் செயலாளர் டி ராஜா நேரில் சந்தித்து கேட்டறிந்தார்.

நெருக்கடி மிகுந்த நேரத்தில், அவரது மரணம் தேசத்திற்கு ஓர் இழப்பாகும்.

முலாயம் சிங் யாதவின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறது. அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button