தமிழகம்

பென்னிகுயிக் சிலை இங்கிலாந்தில் நிறுவப்படும்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை,ஜன.15- தென் தமிழகத்தின் உயிர்நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணை யை கட்டிய ஆங்கிலேய பொறியாளரான கர்னல் ஜான் பென்னிகுயிக்கின்சிலை இங்கிலாந்தில் நிறுவப்படும் என்று முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- ஆங்கிலேய பொறியாளரான கர்னல் ஜான் பென்னிகுயிக், தமிழக மக்களுக் ்காக கடின தியாகமான உழைப்பினா லும், தொழில்நுட்ப நிபுணத்துவத்தினா லும் பெரியாற்றின் குறுக்கே, பெரியாறு அணையை 1895ஆம் ஆண்டு கட்டி முடித்து, தமிழகத்திற்கு குறிப்பாக தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம்ஆகிய ஐந்து மாவட்டங்க ளின் விவசாயம்மற்றும் குடிநீர் தேவை களை பூர்த்தி செய்ய வழிவகை செய்தார். அம்மாவட்ட மக்களின் வாழ்வாதா ரமே முற்றிலும் செழுமையடைந்து மாற்றங்கள் பெற்றுள்ளன. இம்மாவட்டங்களில் தற்போது சுமார் 2,19,840.81 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றுள்ளன. ஆங்கிலேயே அரசு இத்திட்டத்திற்கு தொடர்ந்து நிதியுதவி செய்ய இய லாத சூழ்நிலையில், கர்னல் ஜான் பென்னி குயிக் இங்கிலாந்து சென்று தனது குடும்ப சொத்துக்களை விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு எத்தகைய தடைகள் வந்தாலும், இந்த அணையை எப்படியாவது கட்டி முடிக்க வேண்டும் என்ற தன்னம்பிக்கையுடனும், மனஉறுதியுடனும், விடாமுயற்சியுடனும், துணிவுடன் செயல்பட்டு பெரியாறு அணையை கட்டி முடித்தவர். அவருடைய பிறந்த நாளான (ஜன.15) இன்றைய தின த்தை தமிழர்கள் விமர்சையாக கொண்டா டுகின்றனர்.

தென் தமிழகத்தின் உயிர்நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையை பல இடையூறுகளுக்கு இடை யில் தனது சொந்த பணத்தை செலவு செய்து அமைத்த, “கர்னல் ஜான் பென்னி குயிக்”கின் புதிய சிலையை, அவர் பிறந்த ஊரான இங்கிலாந்து நாட்டின் கேம்பர்ளி நகர மையப் பூங்காவில் தமிழகஅரசு சார்பில் நிறுவப்படுவது குறித்து அவரு டைய பிறந்த நாளான (ஜன.15) அன்று அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகி றேன். கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் புதிய சிலையை அவரின் சொந்த ஊரான லண்டன் கேம்பர்ளி நகர மையப் பூங்காவில் நிறுவ அனைத்துலண்டன் வாழ் தமிழர்களால் முயற்சிகள் எடுக்கப்பட்டு, சிலை நிறுவ இங்கிலாந்து சட்டப்படி, செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தின் ஒப்புதலைப் பெற்றுள்ளார்கள். தமிழ்நாடு தனக்குள்ள உரிமையை விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்து உயர்நீதி மன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும், ஒன்றிய அரசின், நீர் ஆணையம் மற்றும் உயர் அமைப்புகளிடம் சட்டரீதியாக நுணு க்கமான கருத்துக்களை தெரிவித்து, வாதாடி பெரியாறு அணையின் நீர் ்மட்டத்தை 152 அடி உயர்த்த நடவடிக்கை எடுத்து வருகிறது. தென் மாவட்ட மக்களின் நீண்டகால தண்ணீர் பிரச்சனையை கருத்தில் கொண்டு பெரும் போராட்டத்தில் பல் வேறு இன்னல்களை கடந்து கட்டப்பட்ட முல்லைப் பெரியாற்றின் மீதான தமிழ்நாட்டின் உரிமையை எந்நாளும் விட்டுக் கொடுக்காமல் காப்பதற்கு நமது அரசு தொடர் முயற்சி மேற்கொள்ளும் என்பதனையும் தியாகத் திருவுருவமான கர்னல் ஜான் பென்னிகுயிக் பிறந்த நாளில் உறுதி எடுத்துக்கொள்வோம் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button