தமிழகம்

ஜனவரி 26 – கண்டன ஆர்ப்பாட்டம் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல்

நாட்டின் தலைநகர் டெல்லியில் ஜனவரி 26 நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

ஒன்றிய அரசின் செயலைக் கண்டித்து 26.01.2022-ஆம் தேதி – புதன்கிழமை காலை 10 மணிக்கு, 43-செவாலியே சிவாஜி கணேசன் சாலை, தி.நகர், சென்னை – 600 017 முகவரியில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு மாநில அலுவலக வளாகத்தில் தோழர்.இரா.நல்லகண்ணு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர்.இரா.முத்தரசன் உள்பட முன்னணி நிர்வாகிகளும் கலந்து கொள்கிறார்கள். தோழர்கள் திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button