தமிழகம்

அகில இந்திய பொது வேலை நிறுத்தத்திற்கு தி.மு.க. முழு ஆதரவு!

12  அம்சக்  கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 28, 29 தேதிகளில் நடைபெறும் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்திற்கு  தி.மு.கழகம்  முழு ஆதரவு  அளிக்கும் என்று தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து  அவர்  விடுத்துள்ள அறிக்கை வருமாறு :

“நாட்டைக் காப்போம். மக்களைக்  காப்போம்”  என்ற முழக்கத்துடன்  ஒன்றிய  பா.ஜ.க.அரசின்  “தொழிலாளர்  விரோத,மக்கள்    விரோத,    நாட்டிற்கு விரோதமான  கொள்கைகளை கண்டித்து  வருகின்ற  மார்ச்  28 மற்றும்  29  ஆகிய  நாட்களில் நடைபெறும்    அகில    இந்தியபொது  வேலை  நிறுத்தத்திற்கு திராவிட  முன்னேற்றக்  கழகம் ஆதரவு அளிக்க வேண்டும் என தொ.மு.ச.  உள்ளிட்ட  10  தொழிலாளர்  சங்க  நிர்வாகிகள்  கழகத் தலைவர்   அவர்களை   நேரில் சந்தித்து ஆதரவு கோரினார்கள்.

தொழிலாளர் போராட்டங்களின் தொடர்ச்சி!

இந்த  அகில  இந்திய  பொதுவேலைநிறுத்தம்      ஏற்கனவே நடைபெற்று   வரும்   பல்வேறு தொழிலாளர்  போராட்டங்  களின் தொடர்ச்சியாக-  “தொழிலாளர் சட்டத்           தொகுப்புகளை கைவிடுதல்,  மின்சார  திருத்தச் சட்டத்தைத்  திரும்ப  பெறுதல்” “தேசிய  பணமாக்கும்  கொள்கை மூலம்  பொதுத்துறை  நிறுவனங்களை  தனியார்மயமாக்குதலை கைவிடுதல்” உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை    வலியுறுத்தி இந்த  வேலைநிறுத்தம்  நடத்தப்படுகிறது.

ஒன்றிய     பா.ஜ.க.     அரசு எடுக்கும்  ஒவ்வொரு  நடவடிக்கையும்- அறிவிக்கும் ஒவ்வொரு கொள்கையும்  மாநில  உரிமைகளை  மட்டுமின்றி-  தொழிலாளர்களின்     உரிமைகளையும் அடியோடு  பறிக்கும்  வகையில் இருக்கிறது.  தொழிலாளர்களின் நலன்களுக்கு    கேடு    விளைவிக்கும்     விதமாக     இருந்து வருகிறது.  இத்தகைய  அராஜகமான  நடவடிக்கைகளும்-  ஜனநாயக  விரோத-  தொழிலாளர் விரோத     நடவடிக்கைகளும், மக்களுக்கும்,  இந்த  நாட்டிற்கும்பெரும்   பாதிப்பை   ஏற்படுத்தி வருகிறது.  குறிப்பாக-  மின்சார திருத்தச்  சட்டம்  உழவர்களின் நலனுக்கு மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்  வகையில்  இருக்கிறது.

தொழிலாளர் நல விரோத ஒன்றிய பா.ஜ.க. அரசு!

ஆகவே  தொழிலாளர்  நலவிரோத    அரசாக    இருக்கும் ஒன்றிய  பா.ஜ.க.  அரசிற்கு  தங்களது  12  அம்ச  கோரிக்கைகளை வலியுறுத்தும்  விதமாக  நடத்தப்படும் இந்த அகில இந்திய பொதுவேலை நிறுத்தத்திற்கு  திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்முழு  ஆதரவு  வழங்கப்படும்  என்பதை    கழகத்  தலைவர்  அவர்களின்     ஒப்புதலோடு     தெரிவித்துக்  கொள்கிறேன். இந்தப்  பொதுவேலைநிறுத்தப்  போராட்டத்தில் திராவிட  முன்னேற்றக்  கழகத்தினரும்,   கழக   தொழிலாளர் முன்னேற்றச்   சங்க   பேரவை நிர்வாகிகளும்,  தொழிலாளர்களும்  பங்கேற்று-  தொழிலாளர்களின்  உரிமைகளை  மீட்டெடுத்திடவும்-   அகில   இந்திய பொது  வேலைநிறுத்தம்  வெற்றிபெற்றிடவும்    முழு    மூச்சுடன் போராட்டக்   களத்தில்   நின்று ஆதரவளித்திட வேண்டும் என்று கேட்டுக்  கொள்கிறேன்.

இவ்வாறு   கழகப்   பொதுச் செயலாளர்   அமைச்சர்   துரைமுருகன்  தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

நன்றி – முரசொலி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button