தமிழகம்

தலித்துகள், பழங்குடியினர், பெண்கள், சிறுபான்மையினர் மீதான வன்கொடுமைத் தாக்குதலைத் தடுத்து நிறுத்து!

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்

18.11.2025 நாளினை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சமூக நீதி மற்றும் சமத்துவ நாளாகக் கடைபிடித்தும் தலித்துகள் பழங்குடியினர் பெண்கள் மீதான வன்கொடுமைத் தாக்குதலைத் தடுத்து நிறுத்தக் கோரி நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அறந்தாங்கி: அறந்தாங்கி அம்மா உணவகம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் துணைச் செயலாளர் ஏ.ராஜேந்திரன் தலைமை தாங்கினார், நகரச் செயலாளர் ஏ.பெரியசாமி வரவேற்புரையாற்றினார், மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் சிறப்புரை ஆற்றினார், மாநிலக் குழு உறுப்பினர் த.லெனின் ஆர்ப்பாட்டத்தை விளக்கிப் பேசினார். ஆர்ப்பாட்டத்தைத் துவக்கி வைத்து மாவட்டச் செயலாளர் த.செங்கோடன் பேசினார், ஒன்றியச் செயலாளர் இரா.ராதாகிருஷ்ணன் நன்றி உரையாற்றினார். மாவட்டப் பொருளாளர் கே.ஆர்.தர்மராஜன், மாவட்டத் துணைச் செயலாளர் ஏ.ரெங்கராஜ், மாவட்ட நிர்வாகக் குழு தோழர்கள் மு.மாதவன், ஏ.சேசுராஜ் த.செல்வராஜ் சி.தமிழ்மாறன், கே.ராஜேந்திரன், எம்.மீராமைதீன் உள்ளிட்ட 350 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

தேனி: தேனி மாவட்டத்தில் பழைய பேருந்து நிலையம் அருகில் தேனி தாலுகா செயலாளர் பி.மொக்க மாயன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டக் குழு உறுப்பினர் எம்.வி.கல்யாண சுந்தரம் முன்னிலை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.திருமலை கொழுந்து ஆர்ப்பாட்டத்தை விளக்கிப் பேசினார். மாவட்டச் செயலாளர் கி.பெருமாள் ஆர்ப்பாட்டத்தை நிறைவுரை ஆற்றினார்.

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பி.கிருஷ்ணசாமி மாநகரச் செயலாளர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏ.பி.மணிகண்டன் மாவட்டச் செயலாளர் சிறப்புரை நிகழ்த்தினார். மாவட்டக் குழு உறுப்பினர் ராஜாமணி, நத்தம் ஒன்றியச் செயலாளர் பி.வெள்ளைச்சாமி, இந்திய தேசிய மாதர் சம்மேளன மாவட்டச் செயலாளர் சாந்தி, ஏஐடியுசி கௌரவத் தலைவர் சந்திரமோகன், ஏஐடியுசி போக்குவரத்து மாவட்டச் செயலாளர் பாஸ்கரன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். மாநகர துணைச் செயலாளர் சுப்பிரமணி நன்றி கூறினார்.

தருமபுரி: தருமபுரி மாவட்டக் குழு சார்பில் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் எஸ்.கலைச்செல்வம் தலைமை தாங்கினார். மாநிலக் குழு உறுப்பினர் சி.சிவன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எம்.கோபால், எம்.மாதேஸ்வரன், விவசாயச் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.சின்னசாமி, ஏஐடியூசி மாவட்டச் செயலாளர் கே.மணி, ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாவட்டச் செயலாளர் சுப்ரமணி, ஏஐஒய்எப் மாவட்டச் செயலாளர் நவீன்குமார் ஆகியோர் உரையாற்றினர்.

திருச்செங்கோடு: திருச்செங்கோடு அண்ணா சிலை முன்பு மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.சுகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏ.மோகன் மாநில நிர்வாகக் குழு க.அன்புமணி மாவட்டச் செயலாளர் எஸ்.ராமகிருஷ்ணன் டிஒபிஎம் மாவட்டச் செயலாளர் பி.தனசேகரன் ஏஐடியுசி மாவட்டப் பொதுச்செயலாளர் சி.ஜெயராமன் வி.தொ.ச மாவட்டச் செயலாளர் மாவட்டக் குழு தோழர்கள் டி.கே.சுப்பிரமணி, என்.செல்வராஜ், பி.காமராஜ், பி.கார்த்திக், கே.முரளிகிருஷ்ணன், ஆர்.கோபிராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். மாவட்டக் குழு எஸ்.தண்டபாணி நன்றி கூறினார்.

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள மத்திய தந்தி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் சி.சிவசாமி தலைமை தாங்கினார். இதில் மாவட்டத் துணைச் செயலாளர்கள் சி.தங்கவேல், ஜே.ஜேம்ஸ், மாவட்டப் பொருளாளர் மு.வ.கல்யாணசுந்தரம், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பி.மௌனசாமி, மு.குணசேகர், வி.ஆர்.பாண்டியன், சி.மோகன், எஸ்.மோகன், ஜி.பி.சக்திவேல், மாமன்ற உறுப்பினர்கள் சாந்தி சந்திரன், பிரபா ரவீந்திரன், இடைக்குழுச் செயலாளர்கள் எஸ்.சண்முகம், மேட்டுப்பாளையம் மன்சூர், பெரியநாயக்கன்பாளையம் ராமமூர்த்தி, கோவை மத்திய மண்டலம் கலை அஸ்வினி, தொண்டாமுத்தூர் கணேசமூர்த்தி, மதுக்கரை கே.ஆர். தங்கராஜ், இந்திய மாதர் தேசிய சம்மேளன மாவட்டச் செயலாளர் பேபி மோகன், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் மாவட்டத் தலைவர் பி.முருகன், செயலாளர் ஏ.அஸ்ரப் அலி, அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட தலைவர் அபிமன்யு, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாவட்டச் செயலாளர் ப.பா.ரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நெல்லை: நெல்லையில் பாளை.லூர்து நாதன் சிலை முன்பு நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஆர்.சடையப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் ஏ.சேதுராமலிங்கம், மாவட்டப் பொருளாளர் பி.முருகன் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கே.முத்துகிருஷ்ணன், பி.சபியாள் ஆகியோர் உரையாற்றினார்கள். மாநில ஏஐடியுசி தலைவர் எஸ்.காசிவிஸ்வநாதன் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டக் குழு உறுப்பினர்கள் எம்.எஸ்.மணியன், என்.பி.ஷேக், என்.உலகநாதன், வி.வடிவேல், பி.கண்ணன், ஆர்.நக்கீரன், ஏ.வெடி கண்ட பெருமாள், எஸ்.எம்.சேக் மதார், அலுவலகச் செயலாளர் ஏ.முத்துக்கிருஷ்ணன் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மாவட்டக் குழு செயலாளர் கே.இராமசாமி தலைமையில் டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மா.வெங்கடேசன் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாவட்டச் செயலாளர் மத்திய அரசைக் கண்டித்துக் கீழ்க்கண்ட முழக்கங்களை எழுப்பினார். சிபிஐ மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் கு.பாரதி மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஆர்.ரவி, எம்.அஞ்சாமணி, கரீம் பி.ரீட்டா, வி.செல்வம் கள்ளக்குறிச்சி ஒன்றியச் செயலாளர் எஸ்.செந்தில் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி: குமரி மாவட்டம் தக்கலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.ராஜீ தலைமை தாங்கினார். மாவட்டப் பொருளாளர் பி.தாமரைசிங் முன்னிலை வகித்தார். கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் ஜி.சுரேஷ் தொடங்கி வைத்தார். மாவட்டக் குழு உறுப்பினர் பேராசிரியர் எஸ்.சுந்தரம், இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.அனில்குமார் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். மாவட்டச் செயலாளர் தா.சுபாஷ் சந்திர போஸ் முடித்து வைத்தார்.

திருச்சி புறநகர்: திருச்சி புறநகர் மாவட்டம் சார்பில் நெ.1.டோல்கேட் பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலாளர் அண்ணாதுரை தலைமை வகித்தார். மண்ணச்சநல்லூர் ஒன்றியச் செயலாளர் கருணாநிதி, இலால்குடி ஒன்றியச் செயலாளர் சப்தரிஷி, இலால்குடி நகரச் செயலாளர் குணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலாளர் இந்திரஜித் சி.பி.ஐ புறநகர் மாவட்டச் செயலாளர் ராஜ்குமார் முன்னாள் மாநிலக் குழு உறுப்பினர் செல்வராஜ் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பழனிச்சாமி ஆகியோர் உரை நிகழ்த்தினர். மாவட்டப் பொருளாளர் ஜனசக்தி உசேன் நன்றி கூறினார்.

கரூர்: கரூர் தலைமைத் தபால் நிலையம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்குக் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.கலாராணி தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர்கள் கே.சண்முகம் எம்.பி செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட நிர்வாகக் குழு எம்.ரத்தினம் மாவட்டப் பொருளாளர் கே.என்.நாட்ராயன் மாவட்ட நிர்வாகக் குழு கே.குப்புசாமி, ஜிபி எஸ்.வடிவேலன் ஆகியோர் பேசினர். இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாகக் குழு கே.எம்.இசாக் கண்டன உரை ஆற்றினார்.

வடசென்னை: வடசென்னை மாவட்டம் சார்பாக மாவட்டச் செயலாளர் த.கு.வெங்கடேஷ் வேம்புலி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பூர் பகுதிச் செயலாளர் மோ.சந்தோஷ் குமார், இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் ஜி.மஞ்சுளா, முன்னாள் மாவட்டச் செயலாளர் எம்.எஸ்.மூர்த்தி ஆகியோர் உரையாற்றினர். இராயபுரம் பகுதிச் செயலாளர் யு.ஜீலானி நன்றி கூறினார்.

அரியலூர்: அரியலூரில் அண்ணா சிலை அருகில் மாவட்டச் செயலாளர் கே.நடராஜன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சி மாநிலக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் டி.தண்டபாணி சிறப்புரையாற்றினார் முன்னாள் மாவட்டச் செயலாளர் இரா.உலகநாதன்- தோழர், சொ.இராமநாதன்- மாவட்டப் பொருளாளர் ஜி.ஆறுமுகம்- ஆகியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈரோடு வடக்கு: அந்தியூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.கிருஷ்ணகுமார் தலைமையில் சிபிஐ தேசியக்குழு உறுப்பினர் தோழர் வி.ஆறுமுகம் சிறப்புரையாற்றினார். மேனாள் மாவட்ட செயலாளர் டி.ஏ.மாதேஸ்வரன், மாவட்ட துணை செயலாளர் ப.மா.பாலமுருகன், வி.தொ.ச.மாநில செயலாளர் எஸ்.மகேந்திரன், பழங்குடி மக்கள் சங்க மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் கடம்பூர் ராமசாமி, தமிழக ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாநிலக்குழு உறுப்பினர் அ.கு.பரமேஸ்வரன், சிபிஐ மாவட்டக்குழு உறுப்பினர்கள் எல்.சிவராமன், பி.ஜே.கணேசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். நிகழ்வில் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கே.சந்திரசேகர், எஸ்.கந்தசாமி, எஸ்.சி.நடராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button