கட்டுரைகள்வரலாறு

புரட்சியாளர் குதிராம் போஸ்

கலை.அஸ்வினி

ஆங்கிலேயர்கள் மீது குண்டு வீசிய முதல் புரட்சியாளரான குதிராம் போஸ் டிசம்பர் 3, 1889 அன்று மேற்கு வங்காளத்தில் உள்ள மிட்னாபூரில் ஹபிப்பூர் என்ற கிராமத்தில் பிறந்தார். அவரது தந்தை த்ரைலோக்யநாத், தாயார் லட்சுமிபிரியா தேவி ஆவர். போஸின் தந்தை தாசில்தாராகப் பணியாற்றினார்.

குதிராம் தனது தாயை இழந்த அடுத்த வருடமே தந்தையையும் இழந்தார். குதிராம் போஸ் தனது பெற்றோரை இழந்தபோது அவருக்கு வெறும் 6 வயதுதான். அவரது சகோதரி அவரைப் பராமரித்தார். துப்பறியும் புத்தகங்களைப் படிப்பதில் அவருக்கு ஆர்வம் இருந்தது. ஆங்கில ஆதிக்கத்தை வெறுத்தார்.

அக்காவின் கணவரான அமிர்தலால் ராய், போஸை ஹாமில்டன் உயர்நிலைப் பள்ளியில் சேர்க்கிறார். அந்த நாட்களில் அனுசீலன் சமிதியின் நிறுவனரான அரவிந்தரின் பேச்சுக்களால் கவரப்படுகிறார். தன்னுடைய 15-வது வயதில் அனுசீலன் சமிதி என்ற இயக்கத்தில் சேர்ந்தார். அனுசீலன் சமிதி என்பது ஆயுதப் போராட்டத்தின் மூலமே பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை ஒழித்துக் கட்டமுடியும் என்பதில் நம்பிக்கைக் கொண்ட அமைப்பாகும்.

அரவிந்தோ கோஷ் மற்றும் சகோதரி நிவேதிதாவின் பொது உரைகள் அவரை சுதேசி இயக்கத்தின் போது சுதந்திரப் போராட்டத்தில் சேரத் தூண்டின.

1905 ஆம் ஆண்டு, வங்கப் பிரிவினையின் போது, ​​அவர் சுதந்திர இயக்கத்தில் ஒரு தீவிர தன்னார்வலராகச் செயல்பட்டார்.வங்காளத்தில் உள்ள மெதினிபூரில் ஒரு பிரமாண்டமான கண்காட்சி நடைபெற்றது.இளம் குதிராம் அங்குள்ள மக்களுக்கு ‘சோனார் பங்களா’ என்ற தலைப்பில் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து வந்தார். பிரிட்டிஷ் அதிகாரத்தின் அநீதி மற்றும் கொடுங்கோன்மை துண்டுப்பிரசுரங்களில் விளக்கப்பட்டன. இதனால் கண்காட்சி மூலம் பிரிட்டிஷ் தங்களை எவ்வாறு ஏமாற்றுகிறது என்பதை மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. பார்வையாளர்களில் இங்கிலாந்து மன்னருக்கு விசுவாசமான சிலர் இருந்தனர்.

துண்டுப்பிரசுர விநியோகத்தைத் தடுக்க முயன்றனர். அவர்கள் குதிராம் போஸை பயமுறுத்த முயன்றனர், ஆனால் அவர் அவர்களைப் புறக்கணித்து துண்டுப்பிரசுர விநியோகத்தைத் தொடர்ந்தார்.

இறுதியாக, ஒரு போலீஸ்காரர் அவரைப் பிடித்து அவரது கையிலிருந்து துண்டுப்பிரசுரங்களை இழுத்தார்; ஆனால் குதிராம் போலீஸ்காரரின் கையை இழுத்து, அவரது மூக்கில் ஒரு அடி கொடுத்தார். “என்னைத் தொடத் துணியாதே! வாரண்ட் இல்லாமல் என்னை எப்படி கைது செய்கிறீர்கள்’’ என்றார். பின்னர், குதிராம் மீது வழக்குத் தொடரப்பட்டது. ஆனால் அவரது இளமை வயதின் காரணமாக அவர் விடுவிக்கப்பட்டார்.

பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு எதிராக துண்டுப்பிரசுரங்களை விநியோகித்ததற்காக குதிராம் முதன்முதலில் கைது செய்யப்பட்டபோது அவருக்கு 15 வயது.

1908 ஆம் ஆண்டில், குதிராம் அனுசீலன் சமிதியில் சேர்ந்தார்.

ஏப்ரல் 30, 1908 அன்று இரவு, குதிராம் போஸ் மற்றும் ப்ரூஃபுல்லா சாகி ஆகியோர் ஒரு ரிவால்வர் மற்றும் வெடிகுண்டுடன் ஐரோப்பிய கிளப்பை அணுகினர். சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு எதிராக கொடூரமான மற்றும் வெளிப்படையான தீர்ப்புகளை வழங்குவதற்காக அறியப்பட்ட தலைமை பிரசிடென்சி மாஜிஸ்திரேட் கிங்ஸ்ஃபோர்டை அவர்களைக் கொல்ல விரும்பினர் . வண்டி அவருக்கு எதிரே வந்தபோது குதிராம் குண்டை வண்டியின் வீசினார்; ஆனால் துரதிர்ஷ்டவசமாக கிங்ஸ்ஃபோர்ட் அந்த வண்டியில் இல்லை. வேறு சிலர் கொல்லப்பட்டனர்.இந்தியாவில் ஆங்கிலேயர்கள் மீது வீசப்பட்ட முதல் குண்டு அது.

அரவிந்தோ கோஸ் மற்றும் அவரது சகோதரர் பரிந்திர கோஸ் ஆகியோரின் கீழ் , அவர் பிரிட்டிஷ் எதிர்ப்பு நடவடிக்கைகளில் முழுமையாக ஈடுபட்டார். அதன் தலைவர்கள் டக்ளஸ் எச் கிங்ஸ்ஃபோர்டை குண்டுவீச்சு மூலம் படுகொலை செய்யும் பணியை நடத்த குதிராம் போஸ் மற்றும் பிரஃபுல்ல குமார் சாகி ஆகியோரை நியமிக்க முடிவு செய்தனர்.பிரபுல்ல சக்கி, தினேஷ் சந்திர ராய் என்ற பெயரிலும் குதிராம் போஸ், ஹரேன் சர்கார் என்ற பெயரிலும் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டனர். தர்மசாலாவில் சில நாட்கள் தங்கி இருந்து, டக்ளஸை நிழல் போல கண்காணித்து வந்தனர். அவனது நீதிமன்ற பணி நேரம், கிளம்பும் நேரம், அவனின் விருப்பப்பூர்வ இடமான கிளப்பில் இருக்கும் நேரம் என கிங்ஸ் போர்டின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் அவர்களது கண்காணிப்பிற்குள் கொண்டு வந்தனர். அந்த வண்டி கிங்ஸ்போர்டின் வீட்டை நெருங்குகையில், நீதிபதி கிங்ஸ்போர்டின் வண்டி என தவறுதலாக நினைத்து வெடிகுண்டை வீசிவிட்டு மின்னலென இருவரும் தப்பித்திருந்தார்கள். இந்த வெடிகுண்டு வீச்சால் பலத்த காயமடைந்த இரு பெண்களும் அடுத்தடுத்து இறந்து போனார்கள்.

இச்சம்பவம் நடைபெற்ற உடனேயே, இரவு 9 மணிக்குள்ளேயே மொத்த நகரமும் போலீசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ரயில் நிலையங்கள் முழுவதும் கண்காணிக்கப்பட்டன. இதனை முன் கூட்டியே யூகித்த குதிராம் ஏறத்தாழ 25 மைல் வரை நடந்து சென்று வைனி என்ற ரயில் நிலையத்தை 1908, மே 1 அதிகாலை சென்றடைந்தார். மிகுந்த தாகமடைந்த அவர் ஒரு கடையில் தண்ணீரைக் கேட்கும்போது, இவரின் காலணியற்ற தோற்றத்தை கண்ட இரு போலீசுக்காரர்கள், விசாரிக்க ஆரம்பித்தனர்.

போலீசிடமிருந்து தப்பிக்க முனைந்த குதிராம் போஸ்ஸின் துப்பாக்கியின் பழுதால் அதை பயன்படுத்த முடியாமல்போனது. அவரிடமிருந்து ரூ.30 பணம், 37 வெடிகுண்டுகள், ரயில்வே மேப் மற்றும் ரயில் கால அட்டவணை ஆகியவைகள் கைப்பற்றப்பட்டன. அவர் அடுத்த நாள் முசாபர்பூர் போலீசு நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டார்.

“அந்தச் சிறுவனைப் பார்க்க மக்கள் அதிகமாக அங்கே கூடி இருந்தனர். முதல்வகுப்பு பெட்டியில் இருந்து அவனை நடந்தே அழைத்து வந்தனர். அவனிடம் கொஞ்சமும் கவலையோ துக்கமோ இல்லை. மிகவும் மகிழ்ச்சியோடு இருந்தான்.”என்று ஸ்டேட்ஸ்மென் என்ற ஆங்கில இதழ் பதிவு செய்திருந்தது.

1908, மே 21-ம் தேதி விசாரணை தொடங்கியது. அரசுத்தரப்பு வழக்கறிஞர்களாக மன்னுக், பினோத பிகாரி மஜூம்தார் ஆகியோர் ஆஜராகினர். குதிராம் தரப்பிற்காக பண்டேபாத்யாயா, காளிதாஸ்பாசு உள்ளிட்ட வழக்கறிஞர்கள் இலவசமாக ஆஜராகினர்.

1908, ஜூன் 13, தண்டனை அறிவிப்பதற்கான நாளின்போது பெயரில்லாத அநாமதேய வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்திருந்தது. அது வங்காளிகளிடமிருந்து அல்ல மாறாக பீகாரிகளிடமிருந்து வந்தது. எனினும் குதிராமுக்கு தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டது.

அத்தீர்ப்புக்கு எதிராக குதிராம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. பிரிட்டிஷ் நீதிபதிகளால் ஜூலை 18-ம் தேதி குதிராமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கவர்னர் ஜெனரலுக்கு அனுப்பப்பட்ட மேல்முறையீடும் தள்ளுபடி செய்யப்பட்டது. 1908-ம் ஆண்டு ஆகஸ்ட் 11-ம் தேதி தூக்கிலிடப்பட்டபோது குதிராம் போஸ் 18 ஆண்டுகளையும் 8 மாதங்களையும் நிறைவு செய்திருந்தார்.

குண்டுவெடிப்பு குற்றச்சாட்டில் குதிராம் கைது செய்யப்பட்டு ஆகஸ்ட் 11, 1908 அன்று மரண தண்டனை விதிக்கப்பட்டது.

“அச்சிறுவன் தூக்கு மேடைக்கு செல்லும்போது, நாட்டின் விடுதலை முழக்கங்கங்களை எழுப்பியவாறு மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டான்.” என்று அடுத்த நாளில் வெளியான நாளிதழ்கள் பதிவு செய்தன.

குதிராமுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. (ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்ட இந்தியாவின் இளைய புரட்சியாளர்களில் ஒருவராக அவர் ஆனார்) மற்றும் பிரஃபுல்ல குமார் சாக்கி தற்கொலை செய்து கொண்டார்.

வலைத்தளங்களில் இளம்வயதின் புரட்சியாளர்களின் வரலாறு திருடப்படுகிறது, திருத்தி அமைக்கப்படுகிறது.

வரலாற்று ஆவணம் செய்வது காலத்தின் கட்டாயம். குதிராம் போஸின் புரட்சிகர நடவடிக்கை இன்றைய இளைஞர்கள் பின்பற்ற வேண்டும் என்பது மிக முக்கியம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button