
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு செப்டம்பர் 21ம் தேதி முதல் 25ம் தேதி வரை பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் நடைபெற்றது.
மாநாட்டில் பங்கேற்பதற்காக 19ம் தேதி சண்டிகர் சென்றடைந்தோம். 20ம் தேதி மாநாடு நிகழ்ச்சி இல்லாத காரணத்தால் மாநிலக் கட்சி அலுவலகத்திற்கு தோழர் என்.பொ¤யசாமி என்னை அழைத்துச் சென்றார். அங்கு விவசாயத் தொழிலாளர் சங்க அகில இந்தியப் பொதுச் செயலாளர் தோழர் குல்சார் சிங் கொரியா மற்றும் தோழர்கள் இருந்தார்கள். அவர்களோடு உரையாடிக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு தோழர் என் எதிரே வந்து அமர்ந்தார்.
அமர்ந்தவர் நீங்கள் எங்கே இருந்து வருகிறீர்கள் என்று கேட்டார். நாங்கள் தமிழ்நாடு என்று சொன்னோம். அப்போது அவர் எங்கள் பெயர்களைக் கேட்டார், நாங்கள் பதிலுக்கு அவரைப்பற்றி விசாரித்தோம். அவர் பெயர் நாராயண ரெட்டி என்றும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்றும் சொன்னார். 4 1/2 ஆண்டுகள் சிறையில் கழித்ததாகச் சொன்னார். நாங்கள் கேட்டோம் கட்சி தடை செய்யப்பட்ட அடக்குமுறைக் காலத்திலா? அல்லது வேறு போராட்டங்களிலா என்று கேட்டோம்.
அதற்கு நாராயணரெட்டி சொன்ன விவரங்களில் அவர் ஒரு சிறந்த தன்னலமற்ற போராளி என்பதை அறிந்தேன். அவரது சொந்த மாவட்டம் ஒரிஸாவின் கணஞ்சம் மாவட்டம் தெலங்கானாவை ஒட்டிய பகுதி. நல்ல ஆற்றுப்பாசனப் பகுதி விளைச்சல் நிலங்கள், விவசாயத்தை முழுமையாக நடத்தி வாழ்க்கை நடத்துபவர்கள், மண்ணை உயிருக்கும் மேலாக மதிக்கும் மக்கள் வாழ்கின்ற பகுதி இப்பகுதி கோபாப்பூர் என்ற அழகிய கிராமம். வெற்றிலை, வாழை, செண்டு தயாரிக்கப் பயன்படும் வாசனையுள்ள மலர்கள் விளைகின்ற பகுதி. இந்தப் பகுதியில் வாழும் மக்களின் விவசாயிகளின் நிம்மதியைக் கெடுக்க டாடாஸ்டீல் கம்பெனி தொழிற்சாலை வருகிறது. விளைநிலத்தைக் கையகப்படுத்தி வாழ்வாதாரத்தை அழித்துவிட்டு தொழிற்சாலை எதற்கு? என்று மக்கள் வலுவான போராட்டம் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் தொடங்கினார்கள்.
அனைத்து மக்களும் பங்கேற்கும் போராட்டக் குழு கனசங்கராம் கமிட்டி அமைத்துப் போராட்டம் வலுவாக நடைபெற்றது. டாடா கம்பெனி போராட்ட தளபதி தோழர் நாராயணரெட்டியை வளைக்க முயற்சி செய்து முடியவில்லை. மக்கள் விவசாயிகள் ஒற்றுமையைச் சீர்குலைக்க முயற்சித்தார்கள் முடியவில்லை. கடைசியாக அரசின் அடக்குமுறைக் கருவிகளை ஏவி அடக்க நினைத்தார்கள்.
டாடா கம்பெனி தொழிற்சாலைக்குக் கட்டுமானப் பணி தொடக்க நாளன்று போராட்டம் அறிவிக்கப்படுகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் திரள்கிறார்கள். போராட்டத்தை அடக்க நூற்றுக்கணக்கான காவலர்கள் வரவழைக்கப்படுகிறார்கள். அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறார்கள். கனசங்கராம் கமிட்டி பேச்சுவார்த்தைக்குச் சென்று அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.
இந்நேரத்தில் போராட்டம் வலுவடைந்து போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தி இரண்டு பெண்கள் உயி£¤ழந்துவிடுகிறார்கள். கண்முன்னே இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டதை அறிந்த மக்கள், காவலர்கள் மீது பதில் தாக்குதல் நடத்துகிறார்கள். இதில் காவல் ஆய்வாளர் ஒருவரும், காவலர் ஒருவரும் உயிரிழந்திருக்கிறார்கள். அடக்கு முறை கட்டவிழ்த்து விடப்படும் கொலை முயற்சி வழக்கு போடப்படுகிறது. மாவட்ட ஆட்சியருடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்த நாராயணரெட்டி அவ்வழக்கில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்படுகிறார்.
சிறைச்சாலைக்குக் கொண்டு செல்கிறார்கள். சில ஆண்டு காலம் அவருடன் சேர்ந்து போராட்டக்காரர்களும் சிறையில். அதன் பின்பு டாடா ஸ்டீல் கம்பெனி வேறு இடத்துக்கு மாற்றப்படுகிறது.
2010 ல் இதுபோல போக்ஸோ தொழிற்சாலை அமைக்க முற்படுகிறார்கள். தேர்வு செய்யும் இடம் நீர்வளம் மிக்க நல்ல விவசாய நிலங்களைக் கொண்ட பகுதி. புடலங்காய், வெற்றிலை, வாசனைத் திரவியத்திற்கான பொருள்கள் விளைகின்ற பகுதி. இந்தப் போராட்டத்தில் இவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்படுகிறது. சிறைச்சாலைக்குச் செல்கிறார். பின்பு சில ஆண்டுகள் கழித்து வழக்கு நடந்து விடுவிக்கப்படுகிறார். இவ்வாறு மொத்தம் 4 1/2 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் கழித்துள்ளார்.
7 வயதில் தன் சொந்த ஊருக்கு வருகை தந்த எஸ்.வி.காட்டே அவர்களைப் பார்த்திருக்கிறார், 15 ஆண்டு காலம் ஏ.ஐ.எஸ்.எஃப் இல் இருந்து பணியாற்றி பின்பு கட்சியில் இணைந்து 16 ஆண்டுகள் மாநிலச் செயற்குழு உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து செயல்பட்டுள்ளார்.
எதையும் எதிர்பார்க்காமல் அடக்கு முறைகளையும், சிறைக் கொடுமைகளையும் சந்தித்து, இந்த மண்ணையும், மக்களையும், பாதுகாக்க, சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தொழிற்சாலைகளை எதிர்த்துப் போராடி வெற்றி கண்டுள்ளார். இப்படித்தான் மக்கள் கம்யூனியிஸ்ட்டுகள் தலைமையில் போராடி தங்களைப் பாதுகாக்க வருகிறார்கள்.
சில பேர் விளம்பரத்துக்காக நான்தான் மண்ணையும் மக்களையும் காக்க வந்த பிதாமகன் போல் காட்டிக்கொள்கிறார்கள்.
சமீபத்தில் மதுரை டங்ஸ்டன் திட்டம். மிகப்பொ¤ய பாதிப்பு ஏற்படும் இந்தப் பகுதியில் இயற்கை வளம் அழிக்கப்படும் என்ற காரணத்தால் அதன் பாதிப்புகளை மக்கள் தெளிவாக உணர்ந்து, ஆயிரக்கணக்கில் மதுரை நோக்கிப் பாத யாத்திரையாகச் சென்று மிகப்பொ¤ய போராட்டத்தை நடத்தி வெற்றி கொண்டார்கள்.
டங்ஸ்டன் திட்டம் எதிர்ப்புப் போராட்டக்குழு அமைத்து அதன்முலம் மக்களுக்கு அத்திட்டத்தால் ஏற்படும் பின்விளைவுகளை விளக்கி அவர்களை விழிப்புணரச் செய்தவர்கள், தங்களை விளம்பரப்படுத்திக் கொண்டதில்லை. நாட்டின் மீதும் அக்கறை கொண்டுதான் இத்தகைய அரிய செயலைச் செய்து முடித்தார்கள்.
மக்களுக்கான போராட்டங்களில் கம்யூனிஸ்ட் தங்கள் உயிரையும் பணயம்வைத்து, தன்னலமின்றிப் போராடி வருகிறார்கள். அதன் தொடர்ச்சிதான் தற்போது தொடங்கப்பட்ட போராட்டமாகும். தொடர்ந்து போராடுவோம் மாற்றத்தை உருவாக்குவோம்.