கட்டுரைகள்

காலந்தோறும் கம்யூனிஸ்ட்டுகள் – நூல் ஒரு பார்வை (பகுதி -1)

க.திருநாவுக்கரசு, திராவிட இயக்க ஆய்வாளர்

கடந்த ஜூலை 20 ஆம் தேதி சென்னைகாம­ரா­சர் அரங்­கில் கவி­ஞர் ஜீவ­பா­ரதி எழு­திய ‘காலம் தோறும் கம்­யூ­னிஸ்­டு­கள்’ எனும் நூல்–­இ­ரண்டு பாகங்­கள் வெளி ­யி­டப்­பட்­டது. முதல்­வர் மு.க.ஸ்டாலின் மருத்­து­வர்­க­ளின் ஆலோ­ச­னைப்­படி ஓய்வு எடுத்து வந்­த­தால் அந்­நூல்­களை அமைச்­சர் தங்­கம் தென்­ன­ரசு வெளி­யிட்­டார். முதல்­வ­ரால் விழா­வுக்கு வர இய­ல­வில்லை. ஆனால் முதல்­வர் ஓர் அரு­மை­யான இலட்­சிய வாழ்த்­துச் செய்­தியை அனுப்­பி யி­ருந்­தார்.

அதில் ஓரி­டத்­தில்இந்­திய சமூக அமைப்­பைப் பொருத்­த­வரை அதி­கார விடு­தலை மட்­டும் போதாது, வர்க்க விடு­த­லை­யும் சமூக விடு­த­லை­யும் இணைந்­த­தாக இருந்­தால்­தான் அது முழு­மை­யா­ன­தாக இருக்­கும் என்று அன்­றைய பொது­வு­டை­மைத் தலை­வர்­க­ளின் கருத்­தும் சமூக இயக்க வழி­வந்த திரா­விட இயக்க முன்­னோ­டி­க­ளின் சிந்­த­னை­யும் எத்­தனை தீர்க்­க­மா­னது என்­பதை இன்­று­வரை அனு­பவ ரீதி­யாக உணர்ந்து வரு­கி­றோம். அத­னால்­தான் பொது­வு­டைமை இயக்­க­மும் திரா­விட இயக்­க­மும் இந்த இரு­பெ­ரும் விடு­த­லைக்­காக இரட்­டைக் குழல் துப்­பாக்­கி­க­ளாக இன்­று­வரை இயங்கி வரு­வ­தை­யும் நாம் அறி­வோம்”என்று குறிப்­பிட்டு இருக்­கி­றார்.

முதல்­வ­ரின் இந்­தப் பாராட்டு மிக ஆழ­மா­னது. வர்க்­கமா? சமூக விடு­த­லையா? இந்த வினா­வின் இரண்­டும் இணைந்த செயல்­பாட்டு விடை­யில்­தான் அர­சி­யல் புரட்சி மறைந்து உள்­ளது என்று நாம் கூறு­கின்­றோம்.

பொது­வு­டைமை இயக்­கம் நூற்­றாண்டை கண்ட இயக்­கம். அதன் வேரி­னில் இரத்­தத்­தைச் சிந்­தி­ய­வர்­கள், தமது இன்­னு­யிரை அளித்­த­வர்­கள், தூக்­குக் கயிற்றை முத்­த­மிட்­ட­வர்­கள், கொலை செய்­யப்­பட்­ட­வர்­கள், உழைப்பை தமது வாழ்க்கை முழு­வ­தும் நல்­கி­ய­வர்­கள், ஏகா­தி­பத்­திய பிர­புத்­து­வத்­திற்கு எதி­ராக களத்­தில் நின்று தம்மை இழந்­த­வர்­கள். எந்த நிலை­யி­லும் கொள்­கைப்­போர் நடத்­தி­ய­வர்­கள். இயக்­கத்­திற்கு உடை­மையை வழங்­கி­ய­வர்­கள், உடை­மைப்­பித்து இல்­லா­த­வர்­கள், இயக்­கக் கல்­வியை வழங்­கி­ய­வர்­கள் என பெரும் பட்­டி­யல் பொது­வு­டைமை இயக்­கத்­திற்கு என்று உண்டு. அப்­பெ­ரு­மக்­க­ளைப் பற்­றிய வர­லாற்­றுக் குறிப்­பு­க­ளை–­ஒரு நூறு பேருக்­கா­னதை கவி­ஞர் ஜீவ­பா­ரதி தொகுத்து எழுதி நூலாக்கி இருக்­கி­றார். அது­தான் ‘காலம் தோறும் கம்­யூ­னிஸ்­டு­கள்’ எனும் நூல்.

அந்த நூறு பேருக்­கான வீரர்­க­ளின் பட்­டி­ய­லில் வீராங்­க­னை­க­ளும் பத்து பேர் ஒளிர்­கி­றார்­கள். அவர்­க­ளின் போராட்­டக் களம் ஏகா­தி­பத்­தி­யத்­திற்கு எதி­ரான, நில­வு­டை­ மைக்கு எதி­ரான மக்­க­ளுக்­கான போராட்­ட­மாக இருந்து இருக்­கி­றது. தனி­யு­டை­மைக் கொடு­மை­கள் தீர போர்க்­க­ளத்­தில் நின்ற அவர்­கள் இந்­நூ­லின் வழி­யாக நம்­மைப் பார்த்து மீண்­டும் குர­லெ­ழுப்­பு­கி­றார்­கள். பொன்­னு­ல­கைக் காண அணி­ய­மா­குங்­கள் என்­கி­றார்­கள். புரட்­சிக் கவி­ஞர் பார­தி­ தா­சன் பாடலை இப்­படி முழங்­கு­கி­றார்­கள்.

‘‘உல­கம் உண்ண உண்! உடுத்த உடுப்­பாய்!
புகல்­வேன்; ‘உடைமை மக்­க­ளுக்கு பொது’
புவியை நடத்­துப் பொது­வில் நடத்து!
வானைப் போல் மக்­க­ளைத் தாவும்
வெள்ளை அன்­பால் இத­னைக்
குள்ள மனி­தர்க்­கும் கூறடா தோழனே!”

இவ்­வாறு முழங்­கும் ‘காலம் தோறும் கம்­யூ­னிஸ்­டு­கள்’ எனும் நூல் நம் பார்­வைக்கு வந்­தது. வழு­வ­ழுப்­பான தாள். உயர்ந்த அச்சு; படிப்­ப­தற்கு எளி­தான வகைப்­பாடு. சிறந்த கட்­டட அமைப்பு, இரண்டு பாகங்­கள்–524 பக்­கங்­கள் விலை ரூ.2000/. நூலின் ஏடு­க­ளைப் புரட்­டி­னால் களங்­க­ளைக் கண்ட வீரர்­கள் எம்மை நோக்­கிப் பேசு­கி­றார்­கள். எம்மை பின் நோக்கி இழுக்­கி­றார்­கள். எல்­லாம் முடிந்த போது முன்னே போங்­கள்– ‘வேலை இருக்­கி­றது, நிரம்ப!’ என்­கி­றார்­கள் அறி­ஞர் அண்ணாவைப்­போல!

நூலின் பதிப்­பு­ரையே வேலோடு நிற்­கி­றது; ஏனெ­னில் புத்­த­கத்தை வெளி­யி­டு­ப­வர்­கள் என்.சி.பி.எச்.நிறு­வ­னம். அடுத்து இந்­திய கம்­யூ­னிஸ்­டுக் கட்­சி­யின் மாநி­லச் செய­லா­ளர் இரா.முத்­த­ர­ச­னின் அணிந்­துரை நூலி­னுள்ளே செல்­வ­தற்கு முன் ‘நீள்­நெ­றி’யை சுருக்­க­மான வர­லா­றா­கக் காட்டி அதன் திசை­யைச் சுட்­டு­கி­றது. கட்சி அர­சி­ய­லுக்கு ஏற்ற – அணிந்­துரை. படிக்­கப் போகி­ற­வரை ‘எல்­லாம் சொல்லி’ அனுப்பி வைக்­கிற உத்தி. திசை­மானி பாணி. நாம் அவ­ரைப் பாராட்­டா­மல் இருக்க முடி­யாது. ஏனெ­னில் அமை­தி­யாய் அறி­வா­யு­தத்தை வழங்­கு­கி­றார். அர­சி­யல் கல்­வி­யைப் போதிக்­கி­றார். இந்­திய கம்­யூ­னிஸ்­டுக் கட்­சி­யின் தொடக்க நாளினை ஆய்வு செய்து வெளிப்­ப­டுத்தி உள்­ளார். அணிந்­து­ரைக்­குள் வர­லாற்­றைச் சொல்லி இருக்­கி­றார். உண்­மை­யில் நூலுக்­கு­ரிய அணி செய்­கிற தொடக்­கம்.

நூலி­னுள்ளே நுழை­யப் போகி­றோம். இப்­பட்­டி­ய­லில் உள்­ள­வர்­க­ளுள் எல்­லோ­ரை­யும் பற்றி நாம் அறிய வாய்ப்­பில்லை. எந்த ஒரு இயக்­கத்­தி­லும் வெளி­யில் தெரி­யாத வேர்­கள்­தான் எண்­ணி­கை­யில் அதி­க­மாக இருப்­பார்­கள். அவற்­றி­னுள்­ளும் ஒரு சில­ரைத்­தான் தெரிந்து கொள்­ளக் கூடிய வாய்ப்­புக்­கிட்­டும். அவர்­களை மட்­டுமே பதிந்து மற்­ற­வர்க்கு காட்ட முடி­யும். அப்­ப­டித்­தான் ஜீவ­பா­ர­தி­யும் நமக்­குக் காட்­டு­கி­றார்.

ஆனால் நாம் இதற்கு முன்­பா­கவே பொது­வு­டை­மைச் சிந்­த­னை­யா­ளர்­க­ளான ம.சிங்­கா­ர­வே­லர், அமீர்­ஹை­தர் கான், ப.ஜீவா­னந்­தம், ஏ.எஸ்.கே., ஏ.கே. கோபா­லன், இ.எம்.சங்­க­ரன் நம்­பூ­தி­ரி­பாட், ஞானையா, மணலி கந்­த­சாமி, என்.கே. கிருஷ்­ணன், வி.பி.சிந்­தன், கோவை கண்ணா குட்டி, ஜெய­காந்­தன், பி.சுந்­த­ரையா, தா.பாண்­டி­யன், தொ.மு.சி.ரகு­ நா­தன் முத­லான கம்­யூ­னிஸ்டு தலை­வர் க­ளைப் பற்­றிய வர­லா­று­களை எந்­தெந்த வடி­வத்­தில் அவை வெளி­யி­டப்­பட்­ட­னவோ அதன் படியே நாம் படித்து இருக்­கின்­றோம். அவை நம் நினை­வில் நிழ­லா­டிக் கொண்­டி­ருக்­கின்­றன. சிந்­த­னை­யைத் தெளி­வாக்­கிக் கொள்ள உதவி இருக்­கின்­றன. என்.சி.பி.எச். வெளி­யிட்ட எரி­குண்டு தியா­கி­ க­ளைப் பற்­றிய புத்­த­கங்­க­ளை­யும் நாம் படித்து இருக்­கின்­றோம். எந்த அர­சி­யல் இயக்­க­மா­ன­லும் அதில் ஈடு­பாடு கொள்­கி­ற­வர்­கள் தம்­மைப் பற்­றிய பதி­வு­க­ளைச் செய்­வ­தில்லை. அவர்­க­ளுக்கு நேரம் கிடைப்­ப­தில்லை. இன்­னும் சொல்­லப் போ­னால் அத்­த­கை­ய­வர்­க­ளுக்கு அப்­ப­டிப்­பட்ட நினைப்­பும் இருப்­ப­தில்லை.

மனித குல வர­லாறு என்­பதே மனி­தர்­க­ளின் நிலை நிறுத்­தல் ஆகும். அதைப்­பற்­றிய விவ­ரங்­கள் ஜீவ­பா­ரதி போன்­ற­வர்­கள் செய்ய முனை­வார்­கள். அதன் விளைவே ‘காலம் தோறும் கம்­யூ­னிஸ்­டு­கள்’ எனும் நூல். வர­லாற்­றில் இது ஒரு துளி. நல்ல அறி­மு­கம். ஜீவ­பா­ரதி நூலி­னுள் புகு­முன் பகு­தி­யில் இந்­நூல் தோன்­றி­ய­தற்­கான செய்­தி­யைச் சொல்லி இருக்­கி­றார். கடினசித்­தம் இல்­லா­மல் எந்­தச் செய­லும் மாபெ­ரும்வெற்­றி­யைப் பெறு­வ­தில்லை. அந்த வெற்­றியை இந்­நூல் உறு­தி­யாக உழைக்­கும் மக்­க­ளி­டயே உரு­வாக்­கும்.

நூலி­னுள்ளே முதல் பாகத்­தில் சிந்­த­னைச் சிற்பி சிங்­கா­ர­வே­லர் தொடங்கி இரண்­டாம் பாகத்­தில் மதுரை மண ­வா­ளன், மாரி போன்­ற­வர்­க­ளோடு முடி­வ­டை­ கி­றது. ஒவ்­வொரு தோழர்­கள் பற்­றிய வர­ல­ராற்­றுக் குறிப்­பு­க­ளோடு – அவர்­கள் யார், எப்­படி இருப்­பார்­கள் என்­கிற விதத்­தில் வண்ண ஓவி­யங்­கள் இடம் பெற்று இருக்­கின்­றன. புகழ் பெற்ற, நாட­றிந்த தோழர்­க­ளை­விட இவ்­வோ­வி­யங்­கள் மற்ற தோழர்­களை வெளிப்­ப­டுத்­திக் காட்ட பெரி­தும் உத­வி­க­ர­மாக இருக்­கும். துணை­யா­கச் செயல்­பட்­ட­வர்­க­ளை­யும் நூறு பேருக்கு மேலாக ஓவி­ய­மா­கப் பார்க்­கின்­றோம்.

இந்­நூ­லி­னுள்ளே இடம் பெற்று இருக்­கிற வீராங்­க­னை­கள் பார்­வதி கிருஷ்­ணன், மண­லூர் மணி­யம்மை, கே.பி.ஜானகி, சிகப்பி, மீனா கிருஷ்­ண­சாமி, சரஸ்­வதி சுப்­பையா, பாப்பா உமா­நாத், கல்­யாணி குமா­ர­மங்­க­லம், ஜன­கம் இஸ்­மா­யில், சிவ­கா­ம­சுந்­தரி ஆகி­யோர் ஆவர். ‘மூத்த மக­ளிர் ஆதல் தகுதி’ எனச் சங்க இலக்­கி­யம் பேசு­வ­தற்­கொப்ப இவர்­களை நாம் கரு­த­லாம். அவர்­க­ளின் தியா­கங்­க­ளைப் போற்­ற­லாம். பெண்­கள் என்­றால் பின்­புத்தி உடை­ய­வர்­கள் என்­றும் ‘சூத்­தி­ர’த் தன்மை உடை­ய­வர்­கள் என்­றும் இவர்­க­ளின் நட­ வ­டிக்­கை­க­ளைப் பார்த்­தால் சொல்ல முடி­யுமா? அந்­தக் கற்­ப­னை­கள் சுக்கு நூறாக உடைந்து போகும். இதர மக­ளிரை வீராங்­க­ளை ­க­ளாக்க இவர்­க­ளின் வாழ்க்கை ஒரு முன்­மா­தி­ரி­யா­கத் திக­ழும் என்­பதை இவர் க­ளின் வர­லாற்­றுக் குறிப்­பு­க­ளைப் படிப்­ப­வர்­கள் அறிந்து செயல்­பட முனை­வர்.

சிந்­த­னைச்­சிற்பி சிங்­கா­ர­வே­லர் பற்­றிய கட்­டுரை முத­லில் இடம் பெற்று இருக்­கி­றது. அவர்­தான் தென்­னிந்­தி­யா­வின் முதல் கம்­யூ­னிஸ்டு. அப்­படி முத­லில் இடம் பெற்­றி­ருப்­பது சாலப் பொருத்­தப்­பாடு உடை­ய­தா­கும். சிந்­த­னைச் சிற்பி என்­பது ம.சிங்­கா­ர­வே­லர் மறை­வுற்­ற­தை­யொட்டி 24.02.1946 திரா­விட நாடு வார ஏட்­டில் அறிஞர் அண்ணா, அவ­ருக்கு மகு­டம் சூட்டி எழு­தி­ய­தா­கும். இக் கட்­டு­ரை­யில் 1932க்குப் பிறகு சிங்­கா­ர­வே­லர் குடி­அ­ர­சில் எழு­தி­யது போன்ற ஒரு கருத்து மயக்­கம் உள்­ளது. பெரி­யார் – சிங்­கா­ர­வே­லர் சந்­திப்பு 1931 இல் நடந்­தது. இது முதலே அவ­ரது கட்­டு­ரை­கள் குடி­அ­ர­சில் இடம் பெறத் தொடங்­கின. சிங்­கா­ர­வே­லர் 1935 வரை தொடர்ந்து குடி­அ­ர­சில் எழு­தி­னார்.

நூலா­சி­ரி­யர் ஒவ்­வொ­ரு­வ­ரைப் பற்­றி­யும் கட்­டு­ரை­யின் தொடக்­கத்­தில் அறி­மு­கம் செய்­கிற போது இந்­திய சமூ­கத்­தில் அவர் க­ளின் இடத்­தைச் சொல்­கி­றார். கட்­டு­ரை­க­ளில் ஆங்­காங்கே எம்.என்.ராய் வரு­கி­றார். எஸ்.ஏ.டாங்­கே­யும் அவர் எழு­திய நூல் க­ளின் தலைப்­பும் சொல்­லப்­ப­டு­கின்­றன. பி.இரா­மூர்த்­தி­யைப் பற்றி குறிப்­பி­டும் போது சென்னை மாகாண கம்­யூ­னிஸ்­டுக் கட்சி அதி­கா­ரப் பூர்­வ­மாக 1936 இல் தொடங்­கப்­பட்­ட­தைத் தெரிந்து கொள்­கின்­றோம். அதன் முதன் செய­லா­ள­ராக சி.எஸ்.சுப்­பி­ர­ம­ணி­யம் செயல்­பட்­டதை ஆசி­ரி­யர் குறிப்­பி­டு­கி­றார்.

அமீர் ஹைதர்­கான் பற்­றிய செய்தி அநேக கட்­டு­ரை­க­ளில் விரவி இருக்­கின்­றன. சில கட்­டு­ரை­க­ளில் வி.கே. நர­சிம்­மன் வரு­கி­றார். இவரை நாம் அறி­வோம். தேர்ந்த ஆங்­கி­லப் புல­மை­யுள்ள இவர் இந்­தி­யன் எக்ஸ்­பி­ரஸ் டெல்லி பதிப்­புக்கு தலைமை ஆசி­ரி­ய­ராக இருந்­தார். ‘ஹிந்து’ கஸ்­தூரி அய்­யங்­கா­ரின் வாழ்க்கை வர­லாற்றை எழு­தி­ய­வர். அவ­ரது கடைசி காலம் சத்ய சாயி­பாபா அலு­வ­ல­கத்­தில் கழிந்­தது. போராட்­டக் களத்­தில் இப்­ப­டி­யும் சில காட்­சிப் பிழை­கள் வரும்.

ஏ.எஸ்.கே.(கிருஷ்­ண­சாமி)யைப் பற்­றிய கட்­டுரை அவரை நாம் சந்­தித்­ததை நினை­வுப்படுத்­தி­யது. பெரி­யார் மறை­வுக்­குப் பிறகு, ‘பகுத்­த­றி­வின் சிக­ரம் பெரி­யார்’ என்­றொரு நூலை ஏ.எஸ்.கே. எழு­தி­யி­ருந்­தார். பெரி­யார் திட­லில் மணி­யம்­மை­யார் அதனை வெளி­யிட்­டார். அந்­நூ­லில் கடை­சி­யாக முடிக்­கி­ற­போது பெரி­யாரை ஆதி சங்­க­ரர், இரா­மா­நு­ஜர், சைதன்­யர் ஆகி­ய­வர்­க­ளோடு ஒப்­பிட்டு முடித்து இருப்­பார். அந்­தக் கருத்தை விளக்­கு­மாறு கேட்க நேரில் சென்று இருந்­தோம். விளக்­கிச் சொன்­னார். அவ­ரின் அறி­வின் திட்­பத்தை உணர்ந்­தேன்.

கட்­டு­ரை­க­ளில் இடம் பெற்று இருக்­கிற வீர­வ­ணக்­கத்­திற்­கு­ரிய தோழர்­கள் அனு­ப­வித்த சிறை தண்­ட­னை­கள் ஆண்டு கணக்­கில் 10,12,16,17 ஆண்­டு­கள் என்று உள்­ளதை ஜீவ­பா­ரதி மறக்­கா­மல் பதிவு செய்து இருக்­கி­றார். அவர்­க­ளின் பொது வாழ்க்­கைக்­கும் தியா­கத்­திற்­கும் எல்­லையே இல்­லா­மல் இருந்து இருக்­கி­றது. இப்­போது இத­னைப் படிக்­கிற இளைய தலை­மு­றை­யி­னர் இந்த நிகழ்வு மெய்­யா­ன­து­தானா என்று நினைக்­கக் கூடிய வகை­யில் வினா எழுப்­பு­வர். அப்­ப­டிப்­பட்ட தியா­கங்­க­ளைச் செய்­த­வர்­கள் இந் நூலி­னுள்ளே பேசப்­பட்டு இருக்­கி­றார்­கள்.

நாகை முரு­கே­சன், பெரி­யார் திட­லுக்கு வரு­ப­வர், பெரி­யார் நூலக வாச­கர் வட்ட நிகழ்­வில் கலந்து கொள்­ளு­ப­வர், அவர் கையெ­ழுத்­திட்­டுப் போட்டு புத்­த­கம் ஒன்றினை வழங்­கி­னார்– எமக்கு! சிறு­பி­ர­சு­ரங்­களை அச்­சிட்டு அதற்­கு­ரிய காசை வாங்­கிக் கொண்டு வழங்­கு­வார். அந்­தப் பணத்தை ஒரு கைக்­குட்டையில் முடி­போட்டு வைத்­தி­ருப்­பார். அதை வைத்து மீண்­டும் வெளி­யீ­டு­க­ளைக் கொண்டு வரு­வார். அவ­ரைப் பற்­றி­யும் இந்­நூல் பேசு­கி­றது.

வசதி மிகக் குறை­வான காலத்­தில் இப்­பெ­ரு­மக்­கள் எத்­த­கைய சாத­னை­களை நிகழ்த்தி இருக்­கி­றார்­கள் என்­பதை எண்­ணிப் பார்க்­கிற போது சிந்தை நோகி­றது. ஜீவா, சீனி­வாச ராவ், புதுவை சுப்­பையா, ஜம­தக்னி ஆகி­யோ­ரின் வர­லாற்­றுக் குறிப்­பு­கள் கிளர்ச்­சி­யூட்­டு­கின்­றன.

‘இந்­தி­யா­வின் வறு­மை­யைப் பற்­றிய ஆராய்ச்சி’ எனும் நூலின் முன்­னு­ரை­யில் தின­மணி ஆசி­ரி­ய­ராக இருந்த ஏ.என்.சிவ­ரா­மன் எழு­து­கி­ற­போது ஜம­தக்­னி­யைப் பற்றி குறிப்­பி­டு­கி­றார். 1920 ஆம் ஆண்டு ஒத்­து­ழை­யாமை இயக்­கத்­தின் போது கைதா­ன­வர்­களில் ஜம­தக்­னி­யும் ஒரு­வர். அப்­போது சிங்­கா­ர­வே­ல­ரும் சிறை­யில் கைதாகி இருந்­தார். அங்­கே­தான் சிங்­கா­ர­வே­லர்மார்க்­சிய வகுப்பு எடுக்­கி­றார் என்­பதை ஏ.என்.எஸ்.எழு­து­கி­றார். அதில் ஜம­தக்னி பங்­கேற்­கி­றார். அந்­தச் சிந்­தனை ஜம­தக்­னி­யின் வாழ்க்­கை­யில் தொட­ரு­கி­றது.

ஜம­தக்னி தமி­ழாக்­கிய மூல­த­னத்தை வெளி­யிட்­ட­வர் பேரா.நாக­நா­தன் என்று மட்­டும் ஜீவ­பா­ரதி எழு­தி­யி­ருக்­கி­றார். கலை­ஞர் மூல­த­னத்­தைப் பதிப்­பிக்க அர­சின் சார்­பாக வழங்­கிய ரூபாய் ஐந்து லட்­சத்­தைப் பற்றி அவர் குறிப்­பிட்டு இருக்­க­லாம். சிறப்­பாக இருந்­தி­ருக்­கும். எம்.ஆர்.வெங்­கட்­ரா­மன், சர் சி.வி. இரா­ம­னின் உறவு என்­பது அவர் பற்­றிய கட்­டு­ரை­யைப் படிக்­கும் போது­தான் நாம் அறிந்து கொண்­டோம்.

மணலி கந்­த­சா­மி­யைப் பற்றி எழு­தப்­பட்­டுள்ள கட்­டு­ரை­யில், அவர் மனைவி நீதி­மன்­றத்­தில் கூறிய வாக்­கு­மூ­லம் நினைத்­துப் பார்க்­கவே அதிர்ச்­சியை அளிக்­கக் கூடி­ய­தாய் இருக்­கி­றது. ஜீவ­பா­ரதி குறிப்­பிட்­டுள்ள நீதி­மன்ற வாக்­கு­மூ­லம் கு.வெ.பழ­னி­துரை எழு­திய மணலி கந்­த­சாமி வாழ்க்கை வர­லாற்­றுப் புத்­த­கத்­தில் இல்லை. மேலும் இதே போல இ.எம்.எஸ். அமைச்­ச­ர­வை­யில் இருந்த கௌரி தாமசை காவல் துறை­யி­னர் கேவ­லப்­ப­டுத்­தி­னர்என்று கௌரி அம்­மாளே அளித்த பேட்­டியைநாம் படித்து இருக்­கின்­றோம். எப்­ப­டிப்பார்த்­தா­லும் இந்­நி­கழ்வு எவ்­வ­ளவு மோச­மா­னது. அநா­க­ரி­க­மா­னது என்­பதை இதைப் படிக்­கிற ஒவ்­வொ­ரு­வ­ரும் கசிந்­து­ருகி கண்­ணீர் மல்கி நிற்­பர்.

ஒரு கம்­யூ­னிஸ்­டாய் இருப்­ப­வர் சரா­சரி மனி­த­ரின் உணர்ச்­சி­க­ளுக்கு அப்­பால் இயங்­கு­ப­வ­ராக இருப்­பார், இருக்க வேண்­டும் என்­பதை ஒவ்­வொ­ரு­வ­ரின் வாழ்க்­கைக் குறிப்­பும் நமக்கு உணர்த்­து­கி­றது. மேலும் 1938 ஆம் ஆண்டு நடை­பெற்ற முத­லாம் இந்தி எதிர்ப்­புப் போராட்­டத்­தில் தமது 16 ஆவது வய­தில் சங்­க­ரையா ஈடு­பட்டு 6 மாதம் சிறை தண்­டனை அனு­ப­வித்­தார் என­பதை முதன் முத­லாக நாம் தெரிந்து கொண்­டோம். சங்­க­ரை­யா­வைத் தொடர்ந்து தா.பாண்­டி­யன் வரை­யுள்ள வர­லாற்­றுக் குறிப்­பு­க­ளோடு காலம் தோறும் கம்­யூ­னிஸ்­டு­கள் எனும் நூலின் முதல் பாகம் நிறை­வ­டை­கி­றது.

நன்றி: முரசொலி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button