கட்டுரைகள்

நீதியை அவமதிப்பதா?

உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர் பி.ஆர்.கவாய்க்கு பொறுப்பேற்றது முதல் எத்தனை அவமானங்கள்

உச்­ச­நீ­தி­மன்­றத்­தின் தலைமை நீதி­ப­தி­யாக வந்­தது முதல் நீதி­ய­ர­சர் கவாய் அவர்­க­ளுக்கு எத்­தனை அவ­மா­னங்­கள் இழைக்­கப்­ப­டு­கி­றது? இந்­திய நீதித் துறை வர­லாற்­றில் இத்­த­கைய அவ­மா­னங்­களை எந்­தத் தலைமை நீதி­ப­தி­யும் சந்­தித்­தது இல்லை என்று சொல்­லத்­தக்க வகை­யில் அவர் நடத்­தப்­ப­டு­கி­றார்.

“அர­சுக்கு எதி­ரான வழக்கை என் தலை­மை­யி­லான அமர்வு விசா­ரிப்­பதை ஒன்­றிய அரசு விரும்­ப­வில்லை” என்று வெளிப்­ப­டை­யாக தலைமை நீதி­பதி பி.ஆர்.கவாய் குற்றம்­சாட்டி இருக்­கி­றார். நவம்­பர் 23 ஆம் தேதி­யன்று அவ­ரது பணிக்­காலம் முடிகிறது. அதற்­குள் தான் அவ­ரது வருத்­தம் மிகுந்த குரல்­க­ளைத் தொடர்ந்து கேட்க முடிகி­றது.

பல்­வேறு தீர்ப்­பா­யங்­க­ளின் தலை­வர்­கள் மற்­றும் உறுப்­பி­னர்­க­ளின் சேவைக்­கான நிபந்­த­னை­களை (uniform Service Condidtions) ஒரே மாதி­ரி­யாக்­கும் தீர்ப்­பாய புன­ர­மைப்பு சட்ட விவ­கா­ரம் தொடர்­பாக ஒன்­றிய அர­சுக்கு எதி­ராக பல்­வேறு மனுக்­கள் உச்சநீதிமன்­றத்­தில் தாக்­கல் செய்­யப்­பட்­டன. இந்த மனுக்­கள் தலைமை நீதி­பதி பி.ஆர்.கவாய் மற்­றும் நீதி­பதி வினோத் சந்­தி­ரன் ஆகி­யோர் அடங்­கிய அமர்­வில் விசா­ரிக்­கப்­பட்டு வரு­கி­றது. மனு­தா­ரர்­கள் தரப்பு வாதங்­களை வழக்­க­றி­ஞர்­கள் நீதிமன்­றத்­தில் முன்­வைத்து விட்­ட­னர். இதை­யடுத்து ஒன்­றிய அரசு சார்­பில் வாதங்கள் வைக்க வேண்­டும். ஆனால் அதற்கு முன்­பாக ஒன்­றிய அரசு சார்­பில் ஒரு மனு தாக்கல் செய்­யப்­பட்­டது. ‘இந்த வழக்கை 5 நீதி­ப­தி­கள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்­டும்’ என்று நள்­ளி­ர­வில் மனுதாக்­கல் செய்­துள்­ளார்­கள்.

உச்­ச­நீ­தி­மன்­றத் தலைமை நீதி­ப­தி­யின் அமர்வு ஒரு வழக்­கின் விசா­ர­ணையை நடத்தி வரும் போது, அவரை அவ­மா­னப்­ப­டுத்­தும் வகை­யில் ‘இந்த வழக்கை 5 நீதி­ப­தி­கள் கொண்ட அமர்வு விசா­ரிக்க வேண்­டும்’ என்று கோரு­வது ஒன்­றிய அர­சின் குணத்தைக் காட்­டு­கி­றது. இப்­படி ஒரு மனு­வைத் தாக்­கல் செய்ய இருப்­ப­தாக அட்டர்னிஜென­ரல் தன்­னி­டம் சொல்­ல­வில்லை என்­றும் தலைமை நீதி­பதி வருந்தி இருக்­கி­றார்.

தலைமை நீதி­பதி பி.ஆர்.கவாய் கோபம் அடைந்­தார். “நீதி­மன்­றத்­தி­டம் விளை­யா­டும் வித்தை மற்­றும் நிலைப்­பாட்டை அர­சி­டம் இருந்து நாங்­கள் எதிர்­பார்க்­கவே இல்லை. ஒரு வழக்­கில் மனு­தா­ரர்­க­ளின் வாதங்­கள் முடிந்த பிறகு மத்­திய அரசு இத்­த­கைய கோரிக்­கையை வைப்­பது அதிர்ச்­சி­ய­ளிக்­கி­றது. இதனை ஏற்க முடி­யாது. இந்த மனுவை நாங்­கள் தள்­ளு­படி செய்­கி­றோம்.” என்று துணிச்­ச­லாக அறி­வித்­தார் தலைமை நீதி­பதி.

“அர­சுக்கு, எதி­ரான வழக்கை எனது அமர்வு விசா­ரிப்­பதை மத்­திய அரசு விரும்­ப­வில்லை என்று நினைக்­கி­றேன். விரை­வில் நான் ஓய்வு பெறப்­போ­வ­தால் மத்­திய அரசு இப்­ப­டி­யான செயலை எடுத்து இருக்­க­லாம்.” என்று வெளிப்­ப­டை­யாக தலைமை நீதி­பதி வருந்­தி­யது இது­வரை காணாத சொற்­கள் ஆகும்.

இதற்கு அட்­டர்னி ஜென­ரல், “ஒரு­போ­தும் எங்­க­ளுக்கு அப்­ப­டி­யான நோக்­கம் இல்லை. இந்த வழக்­கில் சட்ட ரீதி­யான சில கேள்­வி­கள் உள்­ள­தால்­தான் ஐந்து நீதி­ப­தி­கள் கொண்ட அமர்வை கேட்­டோம். இத­னால் அர­சி­ய­ல­மைப்­பின் பிரிவு 145(3) இன் படி வழக்கை ஐந்து நீதி­ப­தி­க­ளுக்­குக் குறை­யாத அமர்­வுக்­குப் பரிந்­து­ரைக்க வேண்­டும். நீதி­மன்­றத்தை தவ­றாக வழி­ந­டத்­தும் நோக்­கம் எங்க­ளுக்கு இல்லை” என்­றார்.

இதை கேட்ட தலைமை நீதி­பதி பி.ஆர்.கவாய், “சட்ட ரீதி­யான கேள்­வி­கள் அதி­கம் இருப்­பின் அதனை பெரிய அமர்வு விசா­ரிக்க வேண்­டும் என்று நாங்­கள்நினைத்­தால் நாங்­களே அந்த முடி­வுக்கு வரு­வோம். வழக்கை 5 நீதி­ப­தி­கள் கொண்டஅமர்­வுக்கு மாற்­று­வோம். அர­சுக்கு எதி­ரான வழக்கை என் தலை­மை­யி­லான அமர்வு விசா­ரிப்­பதை ஒன்­றிய அரசு விரும்­ப­வில்லை” என்று வருந்தி இருக்­கி­றார். இதற்கு அட்­டர்னி ஜென­ர­லால் முறை­யான பதி­லைச் சொல்ல முடி­ய­வில்லை.

குடி­ய­ர­சுக் கட்­சித் தலை­வர் ஆர்.எஸ்.கவா­யின் மகன் இவர். உச்ச நீதி­மன்ற நீதிபதியாக, நீதி­பதி பூஷன் கவாய் பல வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க வழக்­கு­க­ளில் தீர்ப்பு வழங்­கி­யுள்­ளார்.

2024 ஆம் ஆண்­டில், உச்ச நீதி­மன்­றத்­தின் 7 நீதி­ப­தி­கள் கொண்ட அர­சி­ய­ல­மைப்பு அமர்வு, பட்­டி­யல் சாதி­யி­னர் (SC) மற்­றும் பழங்­கு­டி­யி­னர் (ST) இட­ஒதுக்­கீடு கட்­ட­மைப்­பிற்­குள் துணை வகைப்­பாடு அர­சி­ய­ல­மைப்பு ரீதி­யாக அனு­ம­திக்­கப்படு­கி­றது என்ற ஒரு முக்­கிய தீர்ப்பை வழங்­கி­யது. நீதி­பதி பூஷன் கவாய் இந்த அமர்­வில் இடம் பெற்­றி­ருந்­தார்.

தேர்­தல் பத்­தி­ரத் திட்­டத்தை அர­சி­ய­ல­மைப்­பிற்கு விரோ­த­மா­னது என்­றும், இந்­தத் திட்­டத்­தின் கீழ் நன்­கொ­டை­யா­ளர்­க­ளின் பெயர் வெளி­யி­டப்­ப­டா­தது அர­சி­ய­ல­மைப்­பின் பிரிவு 19(1)(a) இன் கீழ் குடி­மக்­க­ளின் தக­வல் அறி­யும் உரி­மையை மீறு­வ­தாக தீர்ப்பு வழங்­கிய அந்த அமர்­வின் ஐந்து நீதி­ப­தி­க­ளில் நீதி­பதி பி.ஆர்.கவாய் இருந்­தார்.

உத்­த­ரப் பிர­தே­சம் மற்­றும் மத்­தி­யப் பிர­தே­சத்­தில் குற்­றம் சாட்­டப்­பட்­ட­வர்­களின் வீடு­களை இடிப்­பதை எதிர்த்து தாக்­கல் செய்­யப்­பட்ட வழக்­கில் உரிய நடை­மு­றை­யைப் பின்­பற்­றா­மல் சொத்­து­களை அழிப்­பது சட்­ட­வி­ரோ­த­மா­னது என்று கூறி, இடிக்­கும் செயல்­பா­டு­களை கடு­மை­யாக விமர்­சித்­தார்.

அதே நேரத்­தில்பண மதிப்­பி­ழப்பு நட­வ­டிக்­கையை ஆத­ரித்­தும், காஷ்­மீர் மாநி­லத்­துக்கு வழங்­கப்­பட்ட 370 ஆவது சிறப்­புத் தகுதி நீக்­கப்­பட்­டதை ஆத­ரித்­தும் தீர்ப்­ப­ளித்த அமர்வி­லும் இவர் இருந்­துள்­ளார்.

இத்­த­கைய நீதி­ய­ர­சர் கவாய் மீது டெல்லி வழக்­க­றி­ஞர் ராகேஷ் கிஷோர் (71) என்பவர், கடந்த மாதம் கால­ணியை வீசி­னார். அதற்கு அவர் சொன்ன கார­ணம்­தான் கவ­னிக்­கத்­தக்­கது. “சனா­தன தர்­மத்தை அவ­ம­திப்­பதை பொறுத்­துக் கொள்ள முடி­யாது” என தொடர்ந்து கத்தி கூச்­சல் போட்­டுள்­ளார் அந்த வழக்­க­றி­ஞர். அவர் மீதும் இது­வரை எந்த நட­வ­டிக்­கை­யும் இல்லை. ‘நம்­மூ­ரில் இப்­படி வீச முடி­ய­வில்­லையே’ என்று உள்­ளூர் சனா­த­னி­கள் வருந்­திக் கொண்டு இருக்­கி­றார்­கள். எத்­த­கைய மோசமான சூழலை நீதி­ப­தி­கள் கூட சந்­திக்க வேண்டி இருக்­கி­றது என்­பதை உச்­ச­நீ­தி­மன்­றத் தலைமை நீதி­பதி அனு­ப­விக்­கும் கொடு­மை­கள் மூல­மாக அறிய முடி­கி­றது.

முரசொலி – தலையங்கம் 06.11.2025

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button