சவூதி பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

சவூதி பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. இது குறித்து மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இஸ்லாமிய சமூகத்தினர் புனித நகரமாக கருதும், சவூதி அரேபியாவின் மெக்காவில் இருந்து மதினா செல்லும் வழியில், பயணித்துக் கொண்டிருந்த பேருந்து, சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த நேரத்தில், அதன் வழியாக வந்த டேங்கர் லாரி மோதியதில் ஏற்பட்ட விபத்தில் 42 இந்தியர்கள் உயிரிழந்தனர் என்ற துயரச்செய்தி, அதிர்ச்சி அளிக்கிறது.
உயிரிழந்தவர்களில் 10 பேர் சிறுவர்கள் என்பது தாங்கவொணா வேதனை அளிக்கிறது.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து “உம்ரா” யாத்திரை சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
