தமிழகம்

அடி­மைத்­த­னம்­ பற்றி எடப்பாடி பழனி­சாமி பேச­லாமா?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம்

சேலத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 26-வது மாநில மாநாட்டில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், வருகிற 2026 ஆம் ஆண்டு தேர்தலிலும் எங்கள் கூட்டணிதான் வெற்றி பெறும் என்றும், திராவிட மாடல் ஆட்சியில் இந்தியாவுக்கே வழிகாட்டுகிற சாதனைகளைப் படைப்போம் என்றும் குறிப்பிட்டார்.

முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் ஆற்­றிய உரை வரு­மாறு:-

அண்­மை­யில் சென்னையில் நடந்த ‘காலம்­தோ­றும் கம்­யூ­னிஸ்­டு­கள்’ நூல் வெளி­யீட்டு விழா­வில், உங்­கள் எல்­லோ­ரை­யும் சந்­திக்க வேண்­டும் என்று நான் நினைத்­தேன். அதற்­கான ஒப்­பு­த­லை­யும் நான் தந்­தி­ருந்­தேன். ஆனால், உடல்­நிலை கார­ண­மாக வர முடி­ய­வில்லை என்­கின்ற அந்த வருத்­தத்தைத் தீர்க்­கக்­கூ­டிய வகை­யில், இன்­றைய நாள் அமைந்­தி­ருக்­கி­றது!

திரா­விட இயக்­கத்­துக்­கும், பொது­வு­டைமை இயக்­கத்­துக்­கு­மான நட்பு என்­பது, கொள்கை நட்பு! சமூ­கத்­துக்­குத் தேவை­யான நமது கொள்கை வலு­வாக இருக்­கின்ற கார­ணத்­தால்­தான், நம்­மு­டைய நட்­பும் வலு­வாக இருக்­கி­றது! ‘எல்­லார்க்­கும் எல்­லாம்’ என்ற இலட்­சி­யத்­தின் இரு முகங்­கள்­தான் திரா­விட இயக்­கங்­க­ளும், பொது­வு­டைமை இயக்­கங்­க­ளும்! கருப்­பும் – சிவப்­பும் சேர்ந்­த­து­தான் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம்! எங்­க­ளில் பாதி நீங்­கள்! இந்தக் கொள்கை உற­வின் ஆழத்தை, தலை­மு­றை­கள் கடந்­து நாம் சொல்ல வேண்­டும். அப்­போ­து­தான் பல தலை­மு­றை­கள் காக்­கப்­ப­டும்! கொள்கை வேறுபாடுகள் ஒரு­போ­தும் கொள்கை எதி­ரி­க­ளுக்கு இடம் கொடுத்­து­வி­டக் கூடாது!

‘‘திரா­வி­டப் பொது­வு­டை­மை முகா­மாக’’
இந்த மேடை­யைக் கரு­து­கி­றேன்!

அடுத்து 1951-ல் நடந்த தி.மு.க.வின் முதல் மாநில மாநாட்­டுக்கு பேர­றி­ஞர் அண்ணா அவர்­கள் தோழர் ஜீவா அவர்­க­ளை­தான் அழைத்­தார். அன்­றைக்கு அண்ணா என்ன சொன்­னார் என்­றால், “பெரி­யா­ரும் – நானும் – ஜீவா­வும் ஒரு இடத்­தி­லி­ருந்து பணி­பு­ரி­யும் காலம் எதிர்­கா­லத்­தில் வரும். அது பொது­வு­டைமை முகா­மா­கப் பெயர் மாற்­றப்­ப­டும். அந்த முகா­மில் திரா­விட என்ற அடை­மொழி இடம் பெற வேண்­டும்” என்று குறிப்­பிட்­டுச் சொன்ன பேர­றி­ஞர் அண்­ணா­வின் எண்­ணம், இந்த மேடை­யில் நிறை­வேறி இருப்­ப­தா­கத்­தான் நான் கரு­து­கி­றேன்.

நாடு கடு­மை­யான சூழலை எதிர்­கொண்­டி­ருக்­கும் காலக்­கட்­டத்­தில், கொள்கை உணர்­வோடு நாமெல்­லாம் இந்த மேடை­யில் கூடி­யி­ருக்­கி­றோம். “திரா­வி­டப் பொது­வு­டைமை முகா­மாக”த்தான் நான் இந்த மேடையைக் கரு­து­கி­றேன்.

நம்­மு­டைய தோழமை இயக்­கங்­க­ளைச் சேர்ந்­த­வர்­க­ளும் இந்த மேடை­யில் இருக்­கி­றார்­கள். நம்­மு­டைய இந்த ஒற்­று­மை­தான் பல­ரு­டைய கண்ணை உறுத்­து­கின்­றது. “என்­னடா… எத்­தனை சதி செய்­தா­லும், எவ்­வ­ளவு குழப்­பம் ஏற்­ப­டுத்­தி­னா­லும், எப்­ப­டிப்­பட்ட போலிச் செய்­தி­களை எல்­லாம் பரப்­பி­னா­லும் இவர்­கள் ஒற்­று­மை­யாக இருக்­கி­றார்­களே” என்று வாயில், வயிற்­றில் அடித்­துக் கொண்டு புலம்­பிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள்.

சேலத்­தில் சுட்டுக்கொல்லப்பட்ட சிறை தியாகி­கள்
நினை­வாக மணி­மண்­ட­பம்!

நம்­மு­டைய மதிப்­பிற்­கு­ரிய முத்­த­ர­சன் அவர்­க­ளும் ஒரு வேண்­டு­கோளை எடுத்து வைத்­தார். எங்கே சென்­றா­லும், அவர் கோரிக்கை எடுத்து வைப்­பது வழக்­க­மாக வைத்­துக் கொண்­டி­ருக்­கி­றார். ஏதோ மாநாட்­டுக்கு மட்­டு­மல்ல, நிகழ்ச்­சிக்கு மட்­டு­மல்ல, கோட்­டைக்கு வந்­தா­லும் மனு­வோ­டு­தான் வரு­வார். எதற்­காக மனு­வோடு வரு­கி­றார் என்­றால், தனிப்­பட்ட பிரச்­ச­னைக்­காக அல்ல. தொழி­லா­ளர்­க­ளின் பிரச்சினை­க்­காக, பாட்­டாளி மக்­க­ளின் உரி­மை­களுக்­காக அத்தகைய கோரிக்­கையை எடுத்து வரு­வார்.

இந்த அரங்­கத்­துக்கு ‘சேலம் சிறை தியா­கி­கள் அரங்­கம்’ என்று பெயர் சூட்­டி­யி­ருக்­கி­றீர்­களே, சேலம் சிறை­யில், 22 கம்­யூ­னிஸ்­டு­கள் சுட்­டுக் கொல்­லப்­பட்­ட­போது, தந்தை பெரி­யா­ரும், பேர­றி­ஞர் அண்­ணா­வும் கடு­மை­யாகக் கண்­டித்து எழு­தி­னார்­கள். 1950 மார்ச் 5-ஆம் நாளை, கண்­டன நாளாகக் கடைப்­பி­டிக்­கச் சொன்­னார் தந்தை பெரி­யார். திரா­வி­டர் கழ­கம் சார்­பில், ஊர்­வ­ல­மும், கையெ­ழுத்து இயக்­க­மும் நடத்­தப்­பட்­டது. சிறை­யில் இருந்த தோழர்­கள் விடு­தலை செய்­யப்­பட்­ட­போது, குத்­தூசி குரு­சாமி அவர்­கள், சென்னை ஒற்­றை­வாடை தியேட்­ட­ரில் வர­வேற்­புக் கூட்­டத்தை ஏற்­பாடு செய்­தார். இதெல்­லாம் வர­லாறு!

அண்­ணன் முத்­த­ர­சன் அவர்­கள் கேட்டு எதை­யும் நான் தட்­டிக் கழித்­தது கிடை­யாது. முடி­யாது என்று நான் சொல்ல முடி­யுமா? ஒவ்­வொரு மாநாட்­டி­லும் ஒரு கோரிக்கை வைக்­கப்­ப­டு­கி­றது. அது­வும் நிறை­வேற்­றப்­ப­டு­கி­றது. ஆகை­யால், இந்த மாநாட்­டில் வைத்த கோரிக்கை சேலத்­தில் சிறைத் தியா­கி­கள் நினை­வாக விரை­வில் ஒரு மணி­மண்­ட­பம் அமைக்­கப்­ப­டும். அதற்­கான உத்­த­ரவை அதி­கா­ரி­க­ளோடு நான் தொலை­பே­சி­யில் வழங்­கியி­ருக்­கி­றேன். வழங்­கி­விட்டு தான் நான் இந்த மேடைக்கு வந்­தி­ருக்­கி­றேன். நாளை­யி­லி­ருந்து அந்­தப் பணி தொடங்­க­வி­ருக்­கி­றது.

அடி­மைத்­த­னம்­ பற்றி பழனி­சாமி பேச­லாமா?

எதிர்க்­கட்­சித் தலை­வ­ராக இருக்­கக்­கூ­டிய பழ­னி­சாமி அவர்­க­ளுக்கு கம்­யூ­னிஸ்­டு­கள் மேல் திடீர் என்று பாசம், குபீர் பாசம் பொத்­துக்­கொண்டு வந்­தி­ருக்­கி­றது. அடி­மைத்­த­னத்தைப் பற்றி பழ­னி­சாமி அவர்­கள் பேச­லாமா? பேசு­வ­தற்கு அவ­ருக்கு என்ன உரிமை இருக்­கி­றது? எங்­க­ளைப் பொறுத்­த­வ­ரைக்­கும், இங்கே இருக்­கக்­கூ­டிய யாருக்­கும் யாரும் அடிமை இல்லை. அடி­மைத்­த­னத்­துக்கு எதி­ராக கிளர்ந்­தெ­ழுந்த இயக்­கங்­கள்­தான் இங்கே இருக்­கக்­கூ­டிய இயக்­கங்­கள் – திரா­விட இயக்­க­மும், கம்­யூ­னிஸ்ட் இயக்­க­மும்! கொள்­கை­க­ளைப் பற்றி தெரி­யாத பழ­னி­சாமி அவர்­கள், விரக்­தி­யில் வாய்க்கு வந்­ததை எல்­லாம் பேசு­கி­றார். அவ­ருக்­குத் தெரிந்­தது அவ்­வ­ள­வு­தான்!

அதற்­காக நம்­மு­டைய கூட்­ட­ணித் தலை­வர்­களை மிக மிக மோச­மாக கொச்­சைப்­ப­டுத்­து­கி­றார்­கள். நான் கேட்க விரும்­பு­வது, கம்­யூ­னிஸ்ட் தலை­வர்­க­ளை­விட நீங்­கள் என்ன அதி­கம் தியா­கம் செய்­து­விட்­டீர்­களா? நம்­மு­டைய எழுச்­சித் தலை­வர் திரு­மா­வ­ள­வன் அவர்­க­ளை­விட நீங்­கள் என்ன பெரிய தியா­கம் செய்­து­விட்­டீர்­களா? இங்கே இருக்­கக்­கூ­டிய தலை­வர்­களை விட ஏதா­வது ஒரு இடத்­தில் நாங்­கள் மிஞ்சி தியா­கம் செய்­தி­ருக்­கி­றோம் என்று உங்­க­ளால் நிரூ­பிக்க முடி­யுமா? ஒடுக்­கப்­பட்ட மக்­க­ளு­டைய உரி­மை­க­ளுக்­காக போரா­டிக் கொண்­டி­ருக்­கக்­கூ­டிய இயக்­கங்­கள் இந்த இயக்­கங்­கள்.

அவ­தூ­று­க­ளைப் பரப்பி கூட்­ட­ணி­யில்
பிள­வுபடுத்த சிலர் அலை­கி­றார்­கள்!

அவர்­க­ளுக்கு இருப்­பது மக்­கள் மீதான உண்­மை­யான அக்­கறை இல்லை; பிரச்­சினை­க­ளுக்­குத் தீர்வு காண வேண்­டும் என்­பது அவர்­கள் நோக்­கம் இல்லை; புழு­தி­வாரி தூற்றி – அவ­தூ­று­களை பரப்பி நம்­மு­டைய கூட்­டணி தலை­வர்­களை களங்­கப்­ப­டுத்த வேண்­டும்; எப்­ப­டி­யா­வது கூட்­ட­ணி­யில் விரி­சல் ஏற்­ப­டுத்த வேண்­டும் என்ற மலி­வான நோக்­கத்­தோடு இன்­றைக்கு அலைந்து கொண்­டி­ருக்­கி­றார்­கள்.

நாங்­கள் கூட்­ட­ணி­யில் இருக்­கி­றோம்; கூட்­ட­ணி­யில் இருந்­தா­லும், நியா­ய­மான கோரிக்­கை­களை, விமர்­ச­னங்­களை வைக்க கம்­யூ­னிஸ்ட் தோழர்­கள் ஒரு­போ­தும் தவ­றி­ய­தில்லை. நாங்­க­ளும் அவர்­க­ளு­டைய கோரிக்­கை­களை என்­றைக்­கும் நாங்­கள் புறக்­க­ணித்­தது கிடை­யாது. அவர்­க­ளு­டைய கருத்­து­க­ளைக் கேட்­கி­றோம்; விவா­திக்­கி­றோம்; பல­வற்­றில் உடன்­ப­டு­கி­றோம்; அதற்­கான தீர்வை முன்­னெ­டுக்­கி­றோம். இது­தான் ஜன­நா­ய­கம்! அத­னால்­தான் தோழ­மைப் புரி­த­லு­டன் எங்­க­ளு­டைய கூட்­ட­ணிப் பய­ணம் தொடர்ந்து கொண்­டி­ருக்­கி­றது!

நம்­மைப் பொறுத்­த­வ­ரைக்­கும், சாதி­ய­வா­தம் – வகுப்­பு­வா­தம் – பெரும்­பான்­மை­வா­தம் எதேச்­சதி­கா­ரம் – மேலா­திக்­கம் ஆகி­ய­வற்­றுக்கு எதி­ராக ஜன­நா­ய­கச் சக்­தி­கள் ஒற்­று­மை­யாக பணி­யாற்­ற­வேண்­டும்! ஏனென்­றால், நம்­மு­டைய இலட்­சி­யம் பெரிது! அந்த இலட்­சி­யத்­திற்­கா­கத்­தான் நானும், நீங்­க­ளும் இந்த மேடை­யில் இருக்­கி­றோம்! ஜன­நா­ய­கம் – சமூ­க­நீதி – சம­தர்­மம் – சகோ­த­ரத்­து­வம் ஆகி­யவை நம்மை இணைத்­தி­ருக்­கி­றது! ஜன­நா­ய­கத்­துக்கு விரோ­த­மா­ன­ வர்­கள் – சமூ­க­நீ­திக்கு எதி­ரா­ன­வர்­கள் – சம­தர்­மத்தை வெறுப்­ப­வர்­கள் – சகோ­த­ரத்­து­வம் வள­ரக்­கூ­டாது என்று நினைப்­ப­வர்­கள் நம்­மு­டைய தோழ­மையை, கூட்­ட­ணியை விரும்­ப­வில்லை. அத­னால், நமக்­குள் எப்­ப­டி­யா­வது பிளவு ஏற்­ப­டுத்­த­லாம் என்று பார்க்­கி­றார்­கள். நான் உறு­தி­யோடு சொல்­கி­றேன் – அவர்­க­ளு­டைய சதித்­திட்­டங்­கள் ஒரு­போ­தும் நிறை­வே­றாது! அத­னால்­தான், இந்த மாநாட்­டிற்கு ‘வெல்க ஜன­நா­ய­கம்’ ‘எழுச்சி மாநாடு’ என்ற பெய­ரில் இந்த மாநாட்டை எழுச்­சி­யோடு ஏற்­பாடு செய்­தி­ருக்­கி­றார்கள்.

தேர்­த­லையே கேலிக் கூத்­தாக்­கும் ஒன்­றிய பா.ஜ.க. அரசு!

தோழர்­களே… ஜன­நா­ய­கம்­தான் இறு­தி­யில் வெல்­லும்! அதை வெல்ல வைக்க வேண்­டிய பொறுப்­பும், கட­மை­யும் ஜனநா­ய­கச் சக்­தி­க­ளான நமக்­கு­தான் இருக்­கி­றது! அதி­லும் இன்­றைக்கு, ஜன­நா­ய­கத்­துக்கு அடிப்­ப­டை­யான தேர்­த­லையே ஒன்­றிய பா.ஜ.க. அரசு கேலிக்­கூத்­தாக்கி இருக்­கி­றது.

ஒன்­றிய பா.ஜ.க. அரசு, தேர்­தல் ஆணை­யத்தை, தன்­னு­டைய கிளை அமைப்­பாக மாற்­றி­விட்­டது. தன்­னாட்­சிப் பெற்ற தேர்­தல் ஆணை­யத்தை, ‘கீ கொடுத்­தால் ஆடு­கின்ற பொம்­மை’-­யாக மாற்­றி­விட்­டார்­கள். தேர்­தல் ஆணை­யர்­க­ளு­டைய நிய­ம­னத்­தில்­தான் சதி செய்­கி­றார்­கள் என்று பார்த்­தால், வாக்­கா­ளர் பட்­டி­ய­லில் இருந்தே தங்­க­ளு­டைய சதி­யைத் தொடங்­கி­விட்­டார்­கள். சகோ­த­ரர் ராகுல் காந்தி அவர்­கள் வைத்­தி­ருக்­கக்­கூ­டிய இந்த குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு முறை­யான பதில் அளிக்­காத தேர்­தல் ஆணை­யம், அவ­ரைப் பிர­மா­ணப் பத்­தி­ரம் கொடுக்­கச் சொல்லி கட்­டளை இடு­கின்­றது.

கடமை தவ­றிய தேர்­தல் ஆணை­யம்!

தேர்­தல் நடை­மு­றைக்கு அடிப்­படை ஆவ­ணமே வாக்­கா­ளர் பட்­டி­யல்­தான். அதை துல்­லி­ய­மா­க­வும், தவ­று­கள் இல்­லா­ம­லும் தயா­ரிப்­ப­து­தான் சுதந்­தி­ர­மான, நேர்­மை­யான தேர்­த­லுக்கு முக்­கி­யம்! அதைக்­கூட தேர்­தல் ஆணை­யத்­தால் சரி­யாக செய்ய முடி­யாதா? அர­சி­யல் சட்­டம் வழங்­கி­யி­ருக்­கின்ற கட­மை­யில் இருந்து தேர்­தல் ஆணை­யம் தவ­றி­விட்­டது.

தமிழ்­நாடு உள்­ளிட்ட பிற மாநி­லங்­க­ளில் தேர்­தல் நடை­மு­றை­கள் தொடங்­கு­வ­தற்கு முன்பு, சுதந்­தி­ர­மான, நேர்­மை­யான முறை­யில் வாக்­கா­ளர் பட்­டி­யலை சரி­பார்த்து உறு­திப்­ப­டுத்­து­கின்ற பணியை தேர்­தல் ஆணை­யம் நிறை­வேற்ற வேண்­டும்.

ஒன்­றி­யத்­தில் பா.ஜ.க. அரசு அமைந்­தால் என்­ன­வெல்­லாம் நடக்­கும் என்று நாம் எச்­ச­ரித்தது எல்­லாம் இப்­போது நடை­பெ­று­கின்­றது.

விடு­தலை நாள் உரை­யில் ஆர்.எஸ்.எஸ்.ஐ.
புகழ்ந்து பேசிய பிர­த­மர் மோடி!

இந்தி மொழி­யைக் காட்­டா­ய­மாக்­கி­யது, சமஸ்­கி­ரு­தம் மேல் இருக்­கின்ற பற்­றால்­தான் என்று நாம் சொன்­னது உண்­மை­யாகி இருக்­கி­றது. பட்­டப்­ப­டிப்பு படிக்­கா­ம­லேயே, ‘பாரம்­ப­ரிய குரு­கு­லத்­தில்’ படித்­த­வர்­கள் ஐ.ஐ.டி. நிறு­வ­னங்­க­ளில் மாதம் 75 ஆயி­ரம் ரூபாய் உத­வித்­தொ­கை­யு­டன் சேர­லாம் என்று திட்­டம் கொண்டு வந்­தி­ருக்­கி­றார்­கள். ஆர்.எஸ்.எஸ். அமைப்பை முன்­னி­லைப்­ப­டுத்­து­வார்­கள் என்று சொன்­னோம். இப்­போது நாட்­டின் பிர­த­மரே, விடு­தலை நாள் விழா உரை­யில், ஆர்.எஸ்.எஸ்-ஐ புகழ்ந்து பேசி­யி­ருக்­கி­றார். அரசு வெளி­யி­டு­கின்ற விளம்­ப­ரங்­க­ளில், அண்­ணல் காந்­தி­யின் மீது சாவர்க்­கர் படம் இன்­றைக்கு இருக்­கி­றது. இது­தான் இன்­றைய அவல நிலை!

அமைச்­சர் ஐ.பெரி­ய­சாமி வீட்­டில் ரெய்டு!
அடக்­கு­மு­றைக்கு அஞ்­சு­ப­வர்­கள் அல்ல நாங்­கள்!

அம­லாக்­கத் துறையை வைத்து தங்­க­ளுக்கு ஒத்­து­வ­ராத எதிர்க்­கட்­சி­களை மிரட்­டு­வார்­கள் என்று சொன்­னோம். தொடர்ந்து ரெய்டு நடத்­து­கி­றார்­கள். இன்­றைக்­குக்­கூட, மாண்­பு­மிகு அமைச்­சர் ஐ.பெரி­ய­சாமி அவர்­க­ளின் வீட்­டில் ரெய்டு நடத்­தி­யி­ருக்­கி­றார்­கள்.

உற­வி­னர் வீட்­டில் ரெய்டு விட்­ட­வு­டனே ஓடி­வந்து கூட்­ட­ணி­யில் சேர்ந்து கொள்­வ­தற்கு நாங்­கள் என்ன பழ­னி­சா­மியா?

எங்­களை மிரட்ட நினைத்­த­வர்­கள் தான் மிரண்டு போயி­ருக்­கி­றார்­கள்! இதை­விட மோச­மான அடக்­கு­மு­றையை எல்­லாம் பார்த்த இயக்­கம்­தான் தி.மு.க! நெருப்­பாற்­றில் நீந்­தியே பழக்­கப்­பட்­ட­வர்­கள் நாங்­கள்! உங்­க­ளு­டைய எண்­ணம் எந்­தக் காலத்­தி­லும் நிறை­வே­றாது! வழக்­கம்­போல தமிழ்­நாட்டு மக்­கள் உங்­க­ளுக்­குத் தோல்­வி­யைத்­தான் கொடுப்­பார்­கள்!

தமிழ்­நாட்டு மக்­கள் அர­சி­யல் தெளிவு உள்­ள­வர்­கள்; விழிப்­பு­ணர்வு மிக்­க­வர்­கள்! தமி­ழுக்­கும் – தமி­ழி­னத்­துக்­கும் – தமிழ்­நாட்­டுக்­கும் உண்­மை­யாக தொண்­டாற்­று­ப­வர்­கள் யார் என்று தமிழ்­நாட்டு மக்­க­ளுக்கு நன்­றாக தெரி­யும். சமூ­க­நீதி – சம­நீதி – மாநில உரிமை – கூட்­டாட்சி தத்­து­வம் – மொழி உணர்வு – இன எழுச்சி ஆகி­ய­வற்­றிற்­காக, உண்­மை­யாக உழைத்து தியா­கங்­கள் செய்­தது யார்? – நவீ­னத் தமிழ்­நாட்­டின் அனைத்து வளர்ச்­சி­க­ளுக்­கும் அடித்­த­ளம் அமைத்­தது யார் என்று தமிழ்­நாட்டு மக்­க­ளுக்கு நன்­றா­கவே தெரி­யும்!

2021-ல் நம்­மு­டைய மதச்­சார்­பற்ற முற்­போக்­குக் கூட்­டணி வெற்றி பெற்­றது போலவே, 2026-லும் நாம் தான் வெற்றி பெறப்­போ­கி­றோம்!

நம் கூட்­ட­ணிக் கட்­சி­க­ளின் உழைப்­புக்கு முன்­னால்
சதிச் செயல்­கள் நிற்க முடி­யாது!

கம்­யூ­னிஸ்­டு­கள் களத்­தில் இறங்­கி­னால், எப்­ப­டிப்­பட்ட வெற்­றி­யும் வச­மா­கும்! தி.மு.க.வினர் – கம்­யூ­னிஸ்­டு­கள் – நம்­மு­டைய கூட்­ட­ணிக் கட்­சி­யி­னர் ஆகி­யோ­ரு­டைய உழைப்­புக்கு முன்­னால், எப்­ப­டிப்­பட்ட சதிச்­செ­யல்­க­ளும் நிற்­கக்­கூட முடி­யாது. ஜன­நா­ய­கம் வெல்ல களம் நிற்­கும் அத்­த­னைத் தோழர்­க­ளுக்­கும் என்­னு­டைய ரெட் சல்­யூட்!

இன்­றைக்கு ஆட்­சி­யைப் பொறுத்­த­வ­ரைக்­கும், அனைத்­துத் துறை­க­ளி­லும் முத­லி­டம், முத­லி­டம், முத­லி­டம் என்று ஏதோ நாங்­கள் சொல்­ல­வில்லை – ஒன்­றி­யத்­தில் இருக்­கக்­கூ­டி­ய­வர்­களே ஆய்வு செய்து வெளி­யிட்­டுக் கொண்­டி­ருக்­கி­றது. எல்­லா­வற்­றி­லும் முத­லி­டம், முத­லி­டம் என்று பெறக்­கூ­டிய நம்­மு­டைய கூட்­டணி, நம்­மு­டைய மதச்­சார்­பற்ற திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் தலை­மை­யில் இருக்­கக்­கூ­டிய இந்த கூட்­டணி மிகப் பெரிய அள­வில் வெற்றி பெறும், வெற்றி பெறும், வெற்றி பெறு­வ­தற்கு உறுதி எடுப்­போம்!

என்­னு­டைய பெயரே ஸ்டாலின் – தலை­வர் கலை­ஞர் அவர்­கள் அடிக்­கடி சொல்­வார்­கள் – அண்­ணாவை பார்க்­கா­விட்­டால், பெரி­யாரை பார்த்­தி­ருக்­கா­விட்­டால், நானும் இன்­றைக்கு கம்­யூ­னிஸ்­ட் கட்சியில் இருப்­பேன் என்று தலை­வர் கலை­ஞர் சொல்­வார். அதே உணர்­வோடு தான் நானும் இருக்­கி­றேன் – அந்த உணர்­வோடு தான் நானும் இந்த மாநாட்­டில் கலந்து கொண்­டி­ருக்­கி­றேன் என்­பதை மாத்­தி­ரம் எடுத்­துச் சொல்லி, வாழ்க! வெல்க கம்­யூ­னி­சம் என்று சொல்லி, விடை­பெ­று­கி­றேன்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button